தேவன் தருகின்ற ஆசிர்வாதம்

தேவன் தருகின்ற ஆசிர்வாதம்

கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார். ஆதி. 39 : 5

தேவன் நம்மை ஆசீர்வதிப்பது மாத்திரமல்ல நம் மூலம் பிறரையும் ஆசீர்வதிக்கிறார். கர்த்தர் யோசேப்புடன் இருந்து அவன் கையின் பிரயாசங்களை ஆசீர்வதித்தார். அது மட்டுமல்ல யோசேப்பின் நிமித்தம் போத்திப்பார் வீட்டையும் ஆசீர்வதித்தார். இன்றும் தேவன் தமது பிள்ளைகள் மூலம் பிறரை ஆசீர்வதிக்கிறார். ஏசாயா 44 : 3-ல், “உன் சந்ததியின் மேல் என் ஆவியையும் உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்”. தேவன் உலக பிரகாரமான ஆசீர்வாதங்களை மாத்திரமல்ல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் தருகிறார். ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் எவை? பாவ மன்னிப்பின் நிச்சயம், பரிசுத்த ஆவியின் நிறைவு, பரிசுத்த ஆவியின் வரங்கள் ஆகியவையாகும்.

ஆதி. 9 : 1-ல் ‘தேவன் நோவாவையும் அவன் குமாரரையும் ஆசீர்வதித்தார்’. நோவாவின் குடும்பத்தை ஆசீர்வதிக்க காரணம் என்ன? துன்மார்க்கம் நிறைந்த உலகில் நோவா நீதிமானாக வாழ்ந்தான். தேவன் பேழையை செய்யச்சொன்னபோது செய்தான். பேழையில் புகச் சொன்னபோது புகுந்தான். எனவே தேவன் ஆசீர்வதித்தார். பாவம் நிறைந்த உலகில் நாம் பரிசுத்தமாக வாழ தேவன் எதிர்பார்க்கிறார். நாம் உலகத்தின் பாவங்களால் கறைபடாது வாழும்போது தேவன் நம்மையும் நம் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பார்.

ஆதி.12 : 2-ல் ‘நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி உன்னை ஆசீர்வதித்து, உன் பேரை பெருமைப்படுத்துவேன்.’ கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதித்ததால் கர்த்தரை ஆபிரகாம் விசுவாசித்தான். அவன் தன் ஊரை, இனத்தை விட்டு தேவன் காட்டிய இடத்திற்கு சென்றான். தன் ஏக சுதனையும் பலி செலுத்த முன் வந்தான். தேவிசத்தத்திற்கு, தேவ நடத்துதலுக்கு, அவன் தன்னை அற்பணித்தான். அவன் முழுமையாக தன்னை தேவ கரங்களில் அற்பணித்தான். நாமும் நம்மை தேவ கரங்களில் அற்பணிக்கும்போது தேவன் ஆசீர்வதிப்பார்.

ஆதி. 25 : 11-ல் ‘அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார்’. ஈசாக்கு ஆபிரகாமின் வாக்குத்தத்த மகன். அவனையும் தேவன் ஆசீர்வதித்தார். ஈசாக்கு தியான புருஷன். இவனிடம் சில சிறந்த பண்புகள் இருந்தன். ஈசாக்கு வெட்டிய துரவுகளை பகைவர் கைப்பற்றிய போது அவன் அவைகளை விட்டு வேறு துரவுகளை வெட்டினான். அவைகளும் ஆக்கிரமிக்கப்பட்டபோது பின்னும் வேறு துரவுகளை வெட்டினான். அவன் தியானம், தாழ்மை, மன்னித்தல் ஆகிய பண்புடையவனாக இருந்தான். ஆதனால் ஆசீர்வதித்தார். நாமும் இப்பண்புகளுடன் இருக்கும்போது ஆசீர்வதிப்பார்.

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்