இயேசு கிறிஸ்து ஏன் சிலுவையில் மரித்தார்?

இயேசு கிறிஸ்து ஏன் சிலுவையில் மரித்தார்?

கிறிஸ்து ஏன் சிலுவைக்கு போனார் என்று கிறிஸ்தவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லக்கூடிய பதில் என்னுடைய பாவங்களுக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தார் என்பார்கள்

இந்த பதில் உண்மையாக இருந்தாலும் முழுமையான பதில் இல்லை ஏனென்றால் கிறிஸ்து சிலுவையில் மரித்ததற்கு அநேக காரணங்கள் இருக்கிறது

அது என்ன என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்

1) இயேசு கிறிஸ்து பிதாவை அன்பு கூர்ந்தபடியாலும் பிதா அவருக்கு கட்டளையிட்டபடி செய்கிறார் என்பதை உலகம் அறிந்து கொள்ளும்படிக்கு சிலுவையில் மரித்தார்
Joh 14:31 நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.

இயேசு கிறிஸ்து பிதாவிடம் அன்பாய் இருந்தபடியால் அவருடைய கட்டளைகளை கைகொண்டார்
Joh 15:10 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

இயேசு கிறிஸ்து தம்முடைய ஜீவனை சிலுவையில் கொடுத்ததின் மூலம் பிதா மேல் வைத்து அன்பை வெளிப்படுத்தினார்
Joh 15:13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.

2) இயேசு கிறிஸ்து யூதர்களை நியாயப்பிரமாண சாபத்திலிருந்து நீங்கலாக்கி மீட்கும்படி சிலுவையில் மரித்தார்
Gal 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

3) இயேசு கிறிஸ்து மோசேயின் நியாயப்பிரமாணத்தை சிலுவையில் குலைத்து போடும்படிக்கு சிலுவையில் மரித்தார்
Col 2:14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
Col 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

4) இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்தவர்களின் பாவங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு சிலுவையில் மரித்தார்
Rom 3:25 தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்,
Heb 9:15 ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்

5) இயேசு கிறிஸ்து எல்லா மனுஷரையும் தம்மிடம் இழுந்து கொள்ளும்படி சிலுவையில் மரித்தார்
Joh 12:32 நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
Joh 12:33 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.

6) இயேசு கிறிஸ்து பிதாவுக்கு சுகந்த வாசனையான காணிக்கையாகவும பலியாகவும் ஒப்புக் கொடுக்கும்படி சிலுவையில் மரித்தார்
Eph 5:2 கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.

7) இயேசு கிறிஸ்து மரித்தோருக்கும் ஜீவனுள்ளோருக்கும் கர்த்தராக இருக்கும்படி சிலுவையில் மரித்தார்
Rom 14:9 கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.

8) இயேசு கிறிஸ்து பிசாசை தம்முடைய மரணத்தினாலே அழிக்கும்படி சிலுவையில் மரித்தார்
Heb 2:14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,

9) இயேசு கிறிஸ்து யூதரையும் புறஜாதிகளையும் தேவனுக்கு ஒப்புரவாக்கும்படி சிலுவையில் மரித்தார்
Eph 2:15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
Eph 2:16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.

10) இயேசு கிறிஸ்து அக்கிரமக்காரர்கள் தேவனிடத்தில் மனந்திரும்படியும் தேவனுடைய அன்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சிலுவையில் மரித்தார்
Rom 5:6 அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
Rom 5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

11) இயேசு கிறிஸ்து நாம் அவரைப் போல நன்மை செய்து பாடுபட வேண்டும் என்ற மாதிரியை காண்பிப்பதற்காக சிலுவையில் மரித்தார்
1Pe 2:20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.
1Pe 2:21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

12) இயேசு கிறிஸ்து நாம் என்றென்றும் அவரோடு ஜீவிக்க வேண்டும் என்பதற்காக சிலுவையில் மரித்தார்
1Th 5:10 நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.

இயேசு கிறிஸ்து சிலுவைக்கு போனதற்கு இன்னும் அநேக காரணங்கள் இருக்கிறது

நம்முடைய பாவத்திற்காக மாத்திரம் அவர் சிலுவைக்கு போனார் என்பது முழுமையான சத்தியம் இல்லை

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்