அவருடைய கட்டளைகள் வியக்கத்தகு வாக்குத்தத்தங்கள் !

அவருடைய கட்டளைகள் வியக்கத்தகு வாக்குத்தத்தங்கள் !

செய்தி: சகரியா பூணன்

ஆதிமுதலாய் "மனுஷன் எங்ஙனம் வழ வேண்டும்?" என தேவன் விரும்பினாரோ அவ்வித வாழ்க்கையை மனிதன் இப்போது வாழமுடியும், என்பதே சுவிசேஷத்தின் சுபிட்சமான செய்தியாகும்! கிறிஸ்துவின் அழைப்பிற்கு சிறிதும் பிசகில்லாமல் தங்களை சம்பூரணமாய் சமர்ப்பணம் செய்திடும் யாவரும் ஓர் தொடர்ச்சியான வெற்றி வாழ்க்கையை வாழ்ந்திட முடியும்!! ஆனால், துயரம் யாதெனில்... கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டோம் எனக்கூறும் திரளானோர் இந்த நற்சுவிசேஷம் வழங்கும் மகிமையான வாழ்விற்குள் இன்னமும் பிரவேசிக்கவேயில்லை! என்பதுதான்.

பாவத்தை ஜெயித்து வாழும் ஓர் உன்னத வாழ்க்கையைப் புதிய ஏற்பாடு நமக்கு வாக்களித்திருக்கிறது. இதற்குரிய அருமையான தேவ வாக்குதத்தத்தை ரோமர் 6:14, "நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது" என கெம்பீரமாய் கூறுகிறது!!

பயத்திலிருந்தும், கவலையிலிருந்தும், முற்றிலுமாய் விடுதலையாகி ஓர் தொடர்ச்சியான மகிழ்ச்சியின் வாழ்க்கையை வாழும்படி "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.... நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாதீர்கள்!" (பிலிப்பியர் 4:4,6) என கட்டளையிடும் தெய்வ வார்த்தையின் ரீங்காரத்தை கேளுங்கள்!!

நாம் எவைகளைச் செய்வதற்கு தேவன் பெலன் தருகிறாரோ, அவைகளை மாத்திரமே நாம் செய்யும்படி தேவன் கட்டளை கொடுக்கிறார் என்பதை நாம் எப்போதும் நினைவிற்கொள்ள வேண்டும். ஆகவே, ஒன்றை நாம் செய்து சாதித்துவிடுவதற்கு தேவன் நமக்கு அருளும் கிருபையை காணும்போது, அவருடைய கட்டளைகள் அத்தனையும் வாக்குத்தத்தங்களால் இழையோடி இருக்கிறதே!" என நாம் வியக்காமல் இருக்கவே முடியாது!! எனவே, நாம் ஓர் தொடர்ச்சியான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை வாழவேண்டும் எனவும்; முற்றிலுமாய் பயமும் கவலையுமற்ற வாழ்க்கை வாழவேண்டும் எனவும்... மேலே நாம் குறிப்பிட்ட தேவ கட்டளைகள், நாம் அவ்விதமான வாழ்க்கை வாழ்ந்துவிடுவதற்கென தேவன் நம்மைப் பெலப்படுத்தும் வாக்குத்தத்தங்களே என இப்போது அறிந்துகொள்கிறோம்!

இதேபோன்று புதிய ஏற்பாட்டில் எத்தனை எத்தனை மகிமையான வாக்குத்தத்தங்கள் இருக்கிறது தெரியுமா! இவ்வாறு தெய்வ கற்பனைகள் அத்தனையும் வாக்குத்தத்தங்களே என்ற உண்மையை நீங்கள் அறிந்துகொண்டால், "சுவிசேஷம் முழுவதும் சுபிட்சம் நிறைந்த செய்திகளே!" என நீங்கள் மனப்பூர்வமாய் ஏற்று மகிழ்வீர்கள்.

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்