நிலைத்திருக்கும் வாழ்க்கையையே நாடுங்கள்
நிலைத்திருக்கும் வாழ்க்கையையே நாடுங்கள்
செய்தி: சகரியா பூணன்
இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளையாகிவிட்ட ஒருவனுக்கு, இக்காலத்திற்குரியவைகளைக் காட்டிலும் நித்தியத்திற்குரியவைகளே அதிக மேன்மையுள்ளதாய் இருக்கும்! அதாவது, பூமிக்குரியவைகளின் மதிப்பைக் காட்டிலும் பரலோகத்திற்குரியவைகளின் மதிப்பு இவனுக்கு இப்போது அதிக முக்கியமானதாயிருக்கும்.
நித்திய வாழ்வை நோக்கிச் செல்லும் நம்முடைய பயணத்தில், இவ்வுலகம் நாம் கடந்து செல்லும் ‘இடைவெளி’ மாத்திரமேயாகும். ‘தகுதியைப் பெறும் பரீட்சைக்காகவே’ நாம் இவ்வுலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறோம். வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளில் பரலோகத்திற்குரிய நித்தியமானவைகளைத் தெரிந்து கொள்கிறோமா? அல்லது இப்பூமிக்குரிய அநித்தியமானவைகளைத் தெரிந்து கொள்கிறோமா? என்பதைக் காண்பதற்காகவே தேவன் இப்போது நம்மை சோதித்தறிகிறார். நாம் ஞானமுள்ளவர்களாயிருந்தால், நித்தியத்தில் மதிப்புடையவைகளையே தெரிந்து கொள்வோம்!
ஒரு குழந்தை, 500 ரூபாய் நோட்டைக்காட்டிலும் ஓர் பளபளக்கும் வர்ணத்தாளையே விரும்பும். ஏனென்றால் இக்குழந்தைக்கு மதிப்பிடும் சாதுரியம் இல்லை! பரலோகத்திற்கும் நித்தியத்திற்கும் உரியவைகளுக்குப் பதிலாய் இப்பூமிக்குரியவைகளையே நாம் தெரிந்து கொண்டால், நாமும் இக்குழந்தையைப் போலவே நடந்து கொள்கிறோம்!!
"இவ்வுலகமும் அதிலுண்டான யாவும் கடந்து போகும்" என வேதாகமத்தில் மிகவும் தெளிவாக தேவன் நமக்கு கூறியிருக்கிறார். எனவே இப்பூமிக்குரிய தற்காலிகமானவைகளுக்காக நாம் ஜீவிப்பது, நம்முடைய பணத்தை சீக்கிரத்தில் நஷ்டமடைந்து திவாலாகப்போகும் வங்கியில் சேமிப்பதற்கொப்பாகும்!
ஞானமுள்ள மனிதனோ தன் பணத்தை ஓர் நிலையான வங்கியில் சேமித்துவைப்பான். இதைப்போலவே பரலோக ஞானமுள்ளவர்கள், நித்திய மதிப்புடையவைகளுக்காகவே ஜீவிப்பார்கள்! நித்திய மதிப்புடையவைகள்… நம்முடைய குணாதிசயங்களாகிய பரிசுத்தம், அன்பு, நற்குணம், மன்னிக்கும் தன்மை, தாழ்மை போன்றவைகளாகும்! நாம் இந்தப் பூமியை விட்டு கடந்து போகையில் இதுபோன்ற மேலான குணாதிசயங்களை மத்திரமே நம்மோடு எடுத்துச்செல்ல முடியும்!!
ஏனெனில், "ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது" (எபிரெயர் 9:27). ஆம், இந்த "ஒரு வாழ்வை" நித்திய நோக்கத்தோடு வாழ்வதே சாலமும் சிறந்த வாழ்கையாகும்!

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்