மனம்திரும்புவதே விசுவாசத்தின் ஆதாரம் !

மனம்திரும்புவதே விசுவாசத்தின் ஆதாரம் !

செய்தி: சகரியா பூணன்

ஆதிக்கிறிஸ்தவர்களிடம் காணப்பட்ட ஆழ்ந்த தன்மையும், அர்ப்பணமும், வல்லமையும் இன்றுள்ள அனேகமான விசுவாசிகளிடம் காணப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீகளா? ஆம், இவர்கள் சரியானவிதமாய் மனம்திரும்பவில்லை என்பதே பிரதான காரணமாகும். இவர்கள் கிறுஸ்துவை விசுவாசித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் இவர்களோ ‘முதலாவது’ மனந்திரும்பாமலே விசுவாசித்தவர்கள்! எனவேதான் இவர்களின் கிறிஸ்தவ ஜீவியம் ஆழமற்ற "பொக்குத்தன்மை" கொண்டதாய் உள்ளது.

உதாரணமாய், இன்று அநேகருக்குப் பழக்கமான ஓர் கீர்த்தனைப் பாடலின் வாசகத்தைக் கவனித்துப் பாருங்கள்:

  "மா கொடிய துரோகியானாலும்
  மனதார விசுவாசித்தால் போதுமே;
  அக்கணமே அக் கொடியோன்
  இயேசுவின் மன்னிப்பைப் பெற்றிடலாகுமே!"

இவ்வாறு, ஓர் கொடிய துராகிதன் ‘வெறுமனே’ விசுவாசித்து விட்டால் இயேசுவின் மன்னிப்பை உண்மையாகவே பெற்றிட முடியுமா? அவன் ‘முதலாவது’ மனந்திரும்பவேண்டியது அவசியமில்லையா?

இக்கேள்விக்கு நீங்கள், "உண்மையான விசுவாசம் மனந்திரும்புதலோடு இணைந்தே வருகிறது" என பதிலுரைக்கலாம். ஆனால் நீங்கள் எண்ணிக்கொள்ளும் இந்த விளக்கத்தை அக்கொடிய துராகிதன் அறியாதிருப்பானென்றால், தான் விசுவாசித்ததினிமித்தம் ‘மறுபடியும் பிறந்துவிட்டதாக’ அல்லவா தன்னைத் தவறாக முடிவு செய்திருப்பான்? இதினிமித்தம் தன் ஜீவிய காலமெல்லாம் கொடிய ஏமாற்று வஞ்சகத்தில் அம்மனிதன் சிக்கிக் கொள்வானே!

இயேசுகிறிஸ்துவே பிரசங்கித்த முதல் செய்தி யாதெனில், "மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்" (மாற்கு 1:15) என்பதுதான். இதே செய்தியைத்தான் அவருடைய அப்போஸ்தலர்களும் பிரசங்கிக்கும்படி இயேசு கட்டளை கொடுத்தார் (லூக்கா 24:47). அதை அப்படியே அப்போஸ்தலர்களும் கொஞ்சமும் பிசகாமல் பிரசங்கித்தார்கள் (அப்போஸ்தலர் 20:21). ஆம், தேவனுடைய வார்த்தை இதைக்குறித்து மிகவும் தெளிவாகவே இருக்கிறது! நீங்கள் யாராயிருந்தாலும், உங்களுக்கு காரியம் நன்றாய் நடந்து நீங்கள் உண்மையாகவே குணப்பட வேண்டுமென்றால்.... மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் ஒருக்காலும் பிரித்துவிடாதீர்கள்!! இந்த இரண்டையும் தேவனே ஒன்றாக இணைத்துள்ளார். எனவே தேவன் இணைத்ததை மனிதன் ஒருக்காலும் பிரிக்கலாகாது!

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்