'நான் தேவனுடைய பிள்ளை’ என்ற உறுதி நமக்கு வேண்டும்!

செய்தி: சகரியா பூணன்
"நாம் அவருடைய பிள்ளைகள்" என நம் இருதயத்தில் சம்பூர்ணமான உறுதிகொண்டிருக்கவே தேவன் விரும்புகிறார். இந்த உண்மையைக் குறித்து நாம் சந்தேகத்திற்குள் பிரவேசிக்க தேவன் ஒருபோதும் விரும்புவதே இல்லை.
நம்மைச் சந்தேகத்திற்குள் தள்ளும்படி, சாத்தானே சதா முயற்சித்துக் கொண்டிருக்கிறான். நாமோ சந்தேகத்திற்குள் பிரவேசிக்கத் தேவையில்லை! ஏனெனில், நமது சந்தேகங்களை அழித்து நமக்கு உறுதி செய்யும்படி அநேக வாக்குதத்தங்களை தேவன் தன் வார்த்தையில் தந்தருளியுள்ளார்!
அவ்வித வாக்குதத்தங்களில் ஒரு சிலவற்றை சற்றே நோக்குங்கள்: 1) "என்னிடத்தில் வருகிறவனை நான் (ஒருக்காலும்) புறம்பே தள்ளுவதில்லை. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (யோவான் 6:37,47) என இயேசுவே கூறினார்.
2) "அவரை (ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை) ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்" (யோவான் 1:12).
3) "நான் அவர்கள் அநியாயங்களை கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்" என்றும் ஆண்டவர் கூறினார் (எபிரெயர் 8:12).
தேவனுடைய வாக்குத்தத்தங்களில் விசுவாசம் வைப்பதென்பது ஓர் நதியைக் கடப்பதற்காக கட்டப்பட்ட வலுவான பாலத்தின்மீது நடக்கும்படி நம் கால்களை வைப்பதற்கே ஒப்பாகும்! நம்முடைய கால்கள் பெலஹீனமானதாயிருக்கலாம்! அதினாலென்ன?... பாலம் உறுதியானதாயிருந்தால், அது போதுமே!! இப்போது எது உறுதியான விசுவாசம் என்பதற்கு நீங்களே பதில் கூறுங்கள்: ஆம், "ஓர் வலுவான தேவனையும் அவர் அளித்த வாக்குதத்தங்களையும் முழுவதுமாய் நம்பிச் சார்ந்துகொள்ளுவதே" உறுதியான விசுவாசம் ஆகும்!! இன்றிலிருந்து "நான் தேவனுடைய பிள்ளை" என உரத்த சத்தமாய் விசுவாச உறுதியுடன் அறிக்கை செய்துவிடுங்கள்!!

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்