‘எது நடந்தாலும்’ வேதவாக்கை பற்றிநடப்பதே விசுவாச வாழ்க்கை!

‘எது நடந்தாலும்’ வேதவாக்கை பற்றிநடப்பதே விசுவாச வாழ்க்கை!

செய்தி: சகரியா பூணன்

அநேக சமயங்களில் நம்முடைய ‘உணர்ச்சிகள்’ (Feelings ) நம்மை வஞ்சிக்கக் கூடியவைகளாகவே இருக்கிறது. ஆகவே இவ்வித உணர்ச்சிகளை நாம் ஒருபோதும் சார்ந்து நம்பிவிடவே கூடாது! உண்மை (Fact); விசுவாசம் (Fath); உணர்ச்சி (Feelings) ஆகியவைகளை மூன்று மனிதர்களாக சுட்டிக்காட்டி கூறிடும் உவமை ஒன்றுண்டு. இந்த மூன்று மனிதர்களும் ஓர் ஒடுக்கமான சுவற்றின்மேல் ஒருவர்பின் ஒருவராக நடந்து சென்று கொண்டிருந்தனர். ‘உண்மை’ (சத்தியம்) முதலாவதாக முன்னோக்கி நடந்து சென்று கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து ‘விசுவாசம்’ நடந்து சென்று கொண்டிருந்தது. கடைசியாக ‘உணர்ச்சி’ விசுவாசத்தை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. விசுவாசம் தன் கண்களை, முன் சென்று கொண்டிருந்த உண்மையின்மீது பதித்தது வரை சகலமும் சுமுகமாய் நடந்தேறியது! அதேபோல், விசுவாசத்தை உணர்ச்சியானது விடாப்பிடியாகப் பின்தொடர்ந்து சென்றது!! ஆனால் தன்னைப் பின்தொடர்ந்து வரும் உணர்ச்சியைக் காண்பதற்கு விசுவாசம் திரும்பிப் பார்த்தவுடன் நிலை தடுமாறி கீழே விழுந்தது. . . மரணத்தை தழுவியது! அதோடு சேர்ந்து உணர்ச்சியும் செத்து அழிந்தது!! ஆனால் உண்மையோ, தனக்குப் பின்னால் நடந்த எந்த நிகழ்ச்சியையும் சிறிதுகூட பொருட்படுத்தாமல் சுவற்றின்மீது கெம்பீரமாய் நடைபோட்டு ‘தன்னந்தனியே’ சென்று கொண்டேயிருந்தது!!

இந்த உவமை நமக்கு கற்றுத்தரும் பாடம் மிகத்தெளிவாய் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையே, என்றென்றும் மாறாத உண்மை நிறைந்ததாகும் (ரோமர் 10:17). நம்முடைய விசுவாசம் தேவனுடைய வார்த்தையை மத்திரமே உற்று நோக்கிக்கொண்டிருந்தால் ஒருக்காலும் இடறிவிழும் அபாயத்திற்குள் பிரவேசித்திட மாட்டோம்!


விசுவாசத்தை தொடர்ந்து உணர்ச்சிகள் பின்பற்றி வரத்தான் செய்யும்! ஆனால் நம்முடைய உணர்ச்சிகளை நாம் திரும்பிப் பார்க்கத் துவங்கிவிட்டால், நாம் மிக எளிதில் நிலை தடுமாறி அதைரியத்திற்குள்ளும். . . கடும் குற்ற ஆக்கினைக்குள்ளும் வீழ்ந்து மாய்ந்துவிடுவோம்!

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்