சாத்தானோடு கொண்ட ‘யாதொரு’ தொடர்பையும் துண்டியுங்கள்!

சாத்தானோடு கொண்ட ‘யாதொரு’ தொடர்பையும் துண்டியுங்கள்!

செய்தி: சகரியா பூணன்

நாம் இரட்சிக்கப்பட்ட பின்பு சரிசெய்து சீர்ப்படுத்தவேண்டிய விஷயங்களில் ஓர் முக்கியமான பகுதி உள்ளது. அது யாதெனில், சாத்தானோடும் பொல்லாத ஆவிகளோடும் நாம் கொண்டிருந்த உறவேயாகும். நீங்கள் வானசாஸ்திர அஞ்சனத்திலும், விக்கிரக வழிபாட்டிலும், கைரேகை பார்ப்பதிலும், மை வைத்து மேஜிக் செய்வதுமானவைகளில் ஈடுபட்டிருந்தால் அல்லது ‘ராக் மியூசிக்’, தீமையான போதை மருந்துகளில் ஈடுபாடு கொண்டிருந்தால், இவைகளின் மூலம் நீங்கள் சாத்தானோடு கொண்டிருந்த உறவை இப்போது முற்றிலுமாய் துண்டித்துக் கொள்ளவேண்டும்! ‘இதுபோன்ற’ வேறு காரியங்களில் நீங்கள் ஒருவேளை உங்களையும் அறியாமலே தொடர்பு வைத்திருந்தாலும் அவைகளையும் நீங்கள் கண்டிப்பாகத் துண்டித்துக்கொள்ள வேண்டும்!!

இதற்கு நீங்கள் முதலாவது செய்யவேண்டிய காரியம் யாதெனில், நீங்கள் வைத்திருக்கும் எல்லா விக்கிரகங்களையும், மாயஜால புஸ்தகங்களையும், அசுத்த ஆவிகளின் பாதுகாப்பைத் தேடும் ‘தாயத்து’ போன்ற வஸ்துக்களையும் நீங்கள் முற்றிலுமாய் உடைத்தெறிந்து அழிக்கவேண்டும்! (அவைகளில் எதையும் விலையுயர்ந்ததென விற்காமல், அழித்துவிடவேண்டும்! அப்போஸ்தலர் 19:19-ஐ வாசித்துப்பாருங்கள்). அவ்வாறு செய்த பின்பு நீங்கள் இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நான் அறிந்தோ அல்லது அறியாமலோ சாத்தானோடு வைத்திருந்த எல்லாத் தொடர்பையும் துண்டித்துவிட்டேன்" என அறிக்கைசெய்து ஜெபியுங்கள். இவ்வாறு ஜெபித்த பின்பு நீங்கள் நேருக்கு நேராய் சாத்தானுக்கு முன்பாகத் திரும்பிநின்று, "சாத்தானே, என் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் உன்னை நான் கடிந்துகொள்ளுகிறேன். நான் இப்பொழுது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமானவன். இனிமேல் நீ என்னை ஒருக்காலும் தொடவே முடியாது!" என தைரியமாய் கூவி முழங்குங்கள். ஏனெனில் யாக்கோபு 4:7 "தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்!" என தெளிவாய் வக்குரைத்துக் கூறுகிறது. ஆகவே சத்தானுடைய பிடி இனிமேல் உங்கள்மீது இருக்கவே இருக்காது!

1 comments:

  1. Bharath Mathaki Jai... Never one Kill Our Relejion...Jai Hindustan

    ReplyDelete