சாத்தானின் தீமைகளை நன்மையாக மாற்றும் தேவன்!
"இவ்வுலகதில் எல்லா தீமைகளுக்கும் சாத்தான்தான் காரணமென்றால், சாத்தானையும் எல்லா அசுத்த ஆவிகளையும் தேவன் ஏன் அழிக்காமல் வைத்திருக்கிறார்?" என்ற கேள்வியை நாம் கேட்கக்கூடும்.
தேவன் விரும்பினால் சாத்தானை ஒரு நொடிப் பொழுதில் நிச்சயமாய் அழித்துவிட முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை! சாத்தானையும் அவனோடிருக்கும் பிசாசுகளையும் அனுமதித்திருக்க வைத்திருப்பதில் ஓர் தெளிவான நோக்கத்தைத் தேவன் வைத்திருக்கிறார். அவ்வித அவருடைய நோக்கத்தின் ஒரு பகுதி யாதெனில், இப்பூமிக்குரிய வாழ்க்கையை மனிதனுக்கு கடினமானதாகவும்; பாதுகாப்பற்றதாகவும்; அபாயம் நிறைந்ததாகவும் செய்வதற்கு சாத்தானையே தேவன் உபயோகப்படுத்துகிறார்!
அது ஏனென்றால் "இதன் மூலமாய்" ஜனங்கள் இப்பூமிக்குரிய சொகுசான வாழ்க்கையினால் ஈர்க்கப்பட்டுவிடாமல், தேவனிடத்தில் திரும்பவும், நித்திய வாழ்க்கையில் அக்கறை கொள்ளவுமேயாகும்! இதற்குமாறாக இப்பூமிக்குரிய வாழ்க்கை எந்த நோயும் இல்லாமலும்; துன்பம் இல்லாமலும்; தரித்திரம் இல்லாமலும்; ரொம்பவும் சொகுசான வாழ்க்கையாக இருக்குமென்றால் தேவனைக் குறித்த சிந்தை கிட்டதட்ட ஒருவருக்குமே ஏற்படாது! இதனிமித்தமே இவ்வுலகத்தில் பாதுகாப்பற்ற ஜீவியத்தையும், துன்பங்களையும் தேவன் உபயோகித்து.... ‘இதுபோன்ற தேவையான நேரத்தில்’ நாம் அவரிடத்தில் திரும்பவும், அவரைச் சிந்தித்துத் தேடவும் வைக்கிறார்!!
புற்றுநோயினாலோ அல்லது வேறு எந்த கொடிய நோயினாலோ திடீரென்று பாதிக்கப்பட்டு மருத்துவமனை செல்லும்வரைகூட தேவனைத் தேடாத ஜனங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! இதுபோன்ற இக்கட்டான நிலையில் மாத்திரமே இவர்கள் உடனே தேவனிடம் திரும்பிவந்து அவருடைய இரட்சிப்பிற்காக மன்றாட துவங்கி விடுகிறார்கள். எனவே, சுகமாக்க முடியாத வியாதிகள், சுகவீனங்கள், வறுமைகள் இன்னும் இதுபோன்ற உலகத்தில் காணும் தீமைகளைத் தேவன் உபயோகித்து அதன் மூலம் ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து மனம் திரும்பும்படிச் செய்கிறார். முடிவில், ஜனங்கள் பரலோகத்தில் உள்ள தங்கள் நித்திய வீட்டைக் கண்டுகொள்ளும்படி தேவன் நடத்துகிறார்! பார்த்தீர்களா, சாத்தான் நமக்கு கொண்டுவரும் எல்லாத்தீமைகளையும் தேவன் உபயோகித்து, அதன்மூலம் ஜனங்களை சாத்தானின் பிடியிலிருந்து விடுதலையாக்கி தம்முடைய நித்திய இரட்சிப்பிற்குள் அவர்களை நடத்தி விடுகிறார்!!
ஆம், இவ்விதமாகவே சாத்தானை திரும்பத் திரும்ப ஒரு ‘முட்டாளாய்’ தேவன் நிற்க வைத்து விடுகிறார்! சாத்தான் பிறருக்காக “எதையோ மனதில் வைத்து” வெட்டின குழியில், அவனே அக்குழியில் தள்ளப்பட்டு விடுகிறான்!!

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்