நீங்கள் தெய்வ நற்குணம் அடையவேண்டும்!
நீங்கள் தெய்வ நற்குணம் அடையவேண்டும்!
தேவன் நம்மை குணாதிசயம் கொண்டவர்களாயும் சுயாதீனமாய் தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்களாயும் படைத்தார். ஆனால் இவ்வித சுயாதீனமாய் தெரிந்துகொள்ளும் சுதந்திரத்தினிமித்தம் ஏற்படும் அபாயம் யாதெனில், இந்த சுயாதீனத்தைவைத்து நம்மை நாமே பிரியப்படுத்துவதற்கும் தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதற்கும் பயன்படுத்திவிட முடியும்! இவ்வாறு இருந்தபோதும் தேவன் இந்த விபரீதத்தைச் சந்திக்க தயாராயிருந்தார். ஏனென்றால், தேவனாகிய தன்னை சுயாதீனமாய் தெரிந்துகொள்ளும் பிள்ளைகளையே அவர் விரும்புகிறார்!!
தேவன் சிருஷ்டித்த முதல் மனுஷனும் மனுஷியும் ஆதாம் என்றும் ஏவாள் என்றும் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சிருஷ்டிக்கப்பட்டபோது "களங்கம் அற்றவர்களாகவே" இருந்தார்கள். ஆனால் “பரிசுத்தமாய்” இருப்பதற்கோ, அதை அவர்கள் தாங்களாகவே தெரிந்துகொள்ள வேண்டும்! இந்தத் தெரிந்துகொள்ளுதல் ஏற்படுவதற்காகத்தான் அவர்கள் சோதிக்கப்பட வேண்டியிருந்தது. ஏனெனில் அப்போது மாத்திரமே அவர்கள் ‘தீமையை மறுத்து’ தேவனைத் தெரிந்துகொள்ள முடியும்! இதற்காகவே சாத்தான் அவர்களிடம்வந்து, அவர்களைச் சோதிப்பதற்கு தேவன் அனுமதித்தார்! இந்த நிகழ்ச்சியை வேதாகமத்தின் முதலாவது புத்தகமாகிய ஆதியாகமம் 2,3 அதிகாரங்களில் வாசிக்கிறோம்.
களங்கமற்ற தன்மைக்கும் பரிசுத்ததிற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. ஒரு குழந்தையிடம் நாம் காண்பதே களங்கமற்ற தன்மையாகும். ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டபோது அவன் எப்படி இருந்திருப்பான் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், ஒரு குழந்தையை சற்றே உற்று நோக்குங்கள்... நன்மை தீமை இன்னதென்று அறியாததும், களங்கமற்றதுமான தன்மையையே அக்குழந்தையிடம் நீங்கள் காண்பீர்கள். ஆனால் அக்குழந்தை பரிசுத்தமானதோ அல்லது பூரணமானதோ அல்ல! பூரணமடைய வேண்டுமென்றால், அக்குழந்தை வளர்ச்சி அடைந்து ‘தெரிந்து கொள்ளுதலை’ தன் வாழ்வில் கைக்கொண்டு... அதன்மூலம், தீமையை மறுத்து, தேவனைத் தெரிந்து கொண்டு வளர வேண்டும்!
நம்முடைய சிந்தையில் சோதனைக்கு இணங்கிட நாம் மறுக்கும்போதுதான் நம் குணாதிசயங்கள் வளர்ச்சி பெறுகின்றன! இவ்வாறு உங்கள் வாழ்வில் இதுவரை நீங்கள் தெரிந்து கொண்ட முடிவுதான், இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு நடத்தியிருக்கிறது. உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் உங்களைக் காட்டிலும் சிறந்த தூய வாழ்க்கை வாழ்ந்தால், அதற்கு ஒரே காரணம், அவர்கள் தங்கள் வாழ்வில் உங்களைக் காட்டிலும் சிறந்த முடிவை தெரிந்து கொண்டார்கள் என்பதே ஆகும். இவ்வாறு நீங்கள் தெரிந்து கொண்ட முடிவுகளே, நீங்கள் தெய்வ நற்குணம் அடைவதை நிர்ணயம் செய்கிறது!!

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்