உலகத்தில் இருப்பவனை காட்டிலும் என் தேவன் பெரியவரே.


பயப்படாதே. தேவன் உன்னுடன் இருக்கிறார் 

தேவனுக்கு நிகரானவர் யாரும் இல்லை. அவர் பெரியவர். அவர் உங்களோடு இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறார். உலகத்தில் உள்ளவைகள் தங்களுக்காக கவலைப்படும். நமக்காக பரிந்து பேசுபவர் நம் இயேசு ஒருவரே. 

மகா பெரிய தெய்வத்தை சொந்தமாக கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது. இந்த தெய்வத்திற்கு நாம் சாட்சிகளாக இருக்க அழைக்கப்படுகிறோம். இவர் நம் மூலமாக செய்யும் காரியம் பயங்கரமானதாக இருக்கும். அவர் சொல்ல ஆகும், கட்டகளையிட நிற்கும். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்றுரைத்தவர் இயேசு ஒருவரே. 

இந்த தெய்வத்தை சொந்தமாக கொண்டிருக்கிற நம்மை அவரை அப்பா என்று அழைக்க அனுமதித்திருக்கிறார். நாம் அவரால் உண்டானவர்கள். மனிதனை படைத்தது தெய்வம் என்றால் அவரை அப்பா என்று அழைப்பதில் தவறில்லையே. உங்களை மார்போடு அணைக்கும் இந்த மாகா பெரிய உன்னதமான தெய்வம் உங்களை நிச்சயம் கைவிடமாட்டார். தம்மோடு சேர்த்துகொள்வார். 

உலகத்தில் இருப்பவனை காட்டிலும் என் தேவன் பெரியவரே. 

ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறே தேவனும் இல்லை
II சாமுவேல் 7:22 

Source: தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

1 comments:

  1. I am really saying all the messages are very very useful to me may God bless you abundantly...

    ReplyDelete