விசுவாசத்தினால் நல்ல போராட்டத்தை போராடு
விசுவாசத்தினால் நல்ல போராட்டத்தை போராடு. மேகம் போன்ற இயேசுவின் மகிமை உன்னோடு கூட வரும்.
லாசரு இறந்து போய்விட்டதாக அறிந்த இயேசு அவனை உயிரோடு கொண்டு வந்தார். அப்போது இயேசு நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையை காண்பாய் என்று கூறினார். இந்த வசனம் பல் வேறு நிலைகளில் அறியப்பட்டிருந்தாலும், இது மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான வசனமாகும்.
ஏசுவால் கூடாதது ஒன்றும் இல்லை. அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும். வெளியே வா என்று கூப்பிட்ட தேவனின் குரலுக்கு ஓர் பிணம் உயிரோடு வந்தது. இது தேவனின் மகிமை.
நாமும் தேவனின் மகிமையை காண வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இதற்காக பலரும் பிரயாசப்பட்டு ஜெபித்து வருகிறோம். ஆனால் இந்த மகிமையை கண்டடைவதற்கு நாம் தகுதியுடையவர்கள் தானா என்று சோதித்தறிவது நலம்.
முதலில் இங்கு லாசருவை பிணமாக காண்கிறோம். பின் இயேசு லாசரு வாழ்க்கையில் அற்ப்புதம் செய்தவுடன் அவன் தேவ மகிமையை கண்டது மட்டும் அல்ல அங்கிருந்த அனைவரும் கண்டனர். இன்று பல கிறிஸ்தவர்கள் தாங்கள் உயிரோடு இருக்கும் போதே பாவத்திற்குள் மறித்து பிணமாக வாழ்கின்றனர். உலகமும் பாவத்திற்க்குள் மறித்திருப்பதனால் பிண (பாவ) நாற்றம் மற்றவர்களுக்கு தெரிவதில்லை. இந்த பாவ நாற்றத்திர்க்குள் மூழ்கி மூழ்கி பின் அங்கிருந்தவாறே இயேசு கிறிஸ்து என்ற முத்தை அணிந்து கொள்ள துடிக்கிறோம். ஒரு பக்கம் பாவம், இன்னொரு பக்கம் தேவ பக்தி என்று நடிக்கும் பல கிறிஸ்தவர்கள் "இவை இல்லாமல் மனிதன் வாழ முடியாது" என்று போதிக்கவும் ஆரம்பித்துவிட்டனர்.
பாவத்தோடு வாழ்ந்து தேவனை தரிசிக்க முடியாது. ஏன் என்றால் தேவன் எல்லா பாவத்திற்கும் அப்பாற்ப்பட்டவர். பாவத்தை வெறுப்பவர். மனிதனை தேவனிடத்தில் இருந்து பிரித்ததே பாவம் தான். இந்த பாவத்தோடு (சிறு பாவம் தானே என்ற நினைப்புடன்) தேவனை ஆராதித்து ஜெபித்து அதை எதிர்பார்த்து வாழும் கிறிஸ்தவ கூட்டம் ஏராளம்.
அன்பானவர்களே... ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தெரிந்து கொண்ட பாவ மன்னிப்பை விளையாட்டாய் எண்ணி விடாதீர்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் எதுவும் நடக்கும். பின் நியாயத்தீர்ப்பின் காலத்தில் அழுது பிரயோஜனமில்லை. விசுவாசியுங்கள். நம்பிக்கையுடன் ஜெபியுங்கள். உங்கள் இயலாமையை தேவனிடத்தில் அறிக்கையிடுங்கள். தேவ பலத்தை நாடுங்கள். பரிசுத்தமானதை நாய்க்கு கொடாதேயுங்கள், தேவனோடு விளையாடாதீர்கள், பாவத்தோடு விளையாடாதீர்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், பின் தேவனிடத்தில் மகிமையை எதிர்பாருங்கள்.
பாவத்தில் செத்திருப்பவர்கள் தேவனின் மகிமையை காணமுடியாது. பாவத்தோடு வாழும் பொது கிடைக்கும் உயர்வு, பணம், வாழ்க்கை அனைத்தும் பிசாசினால் அசீர்வதிக்கப்பட்டிருக்கும். அதன் பலனை நிச்சயம் மரணத்திலும், மரணத்தின் பின்பும் அனுபவிக்க நேரிடும்.
எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. தேவனோடு உண்மையாய் வாழுங்கள். தேவனோடு வாழ்வது போல நடிக்க வேண்டாம்.
தேவன் உங்களின் விசுவாசத்தை பெலப்படுத்துவாராக. ஆமென்.
Source: தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Thanks brother may God bless you more and more.........
ReplyDelete