பகுதி:3 தலையணை உபதேசங்கள் (கள்ள உபதேசங்கள்)

பகுதி:3 தலையணை உபதேசங்கள் (கள்ள உபதேசங்கள்)

இயேசு கிறிஸ்து குடும்பத்தில் சமாதானத்தை கொடுக்கிறாரா? - Bro. Barnabas

இன்றைக்கு இருக்கக்கூடிய அநேக போதகர்கள் தங்கள் கூட்டங்களில் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வாருங்கள் உங்கள் குடும்பத்திற்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தருகிறார் என்று வாக்குத்தத்தம் செய்கிறார்கள்
Eze 13:18 ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?

இயேசு கிறிஸ்து குடும்பத்தில் சமாதானத்தை கொடுக்கிறாரா?
எத்தனை போதகர்கள் கீழே இந்த வேத வாக்கியத்தை பயன்படுத்தி போதிக்கிறார்கள்
2Ti 3:12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
1Th 3:3 இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.

இந்த வேத வாக்கியங்களை பாருங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாய் இருந்தாலே போதும் நமக்கு துன்பம் வரும் என்கிறார்
அப்படி துன்பம் வரும் போது நாம் எப்படி சமாதானமாக இருக்க முடியும்?

இயேசு கிறிஸ்து எதற்கு வந்து இருக்கிறார்?
Mat 10:34 பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.

இயேசு கிறிஸ்து குடும்பத்தில் பிரிவிணையுண்டாக்க வந்தார்
Mat 10:35 எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.

குடும்பத்தில் ஒருவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது அங்கே பிரிவிணை வருகிறது
மகன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது தகப்பன் அவனுக்கு
எதிர்த்து நிற்கிறான்
மகள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது தாய் அவளுக்கு எதிர்த்து நிற்கிறாள்
மருமகள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது மாமி அவளுக்கு எதிர்த்து நிற்கிறாள்

குடும்பத்தில் ஒருவர் இயேசு கிறிஸ்து ஏற்றுக் கொள்ளும் போது என்னவாகிறது?
குடும்பமே கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நபருக்கு சத்துருவாகிறது
Mat 10:36 ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.

இயேசு கிறிஸ்துவை இந்த பூமியில் இருந்த போது அவருடைய குடும்பத்தார்களோ அவர்களுடைய சகோதரர்களோ அவரை ஏற்றுக் கொள்ள வில்லை
Joh 7:3 அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.
Joh 7:4 பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
Joh 7:5 அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
Joh 1:11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவை போல அநேக உபாவத்திரவங்களை சகித்தார்கள்
Mat 10:17 மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்
Mat 10:21 சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.
Mat 10:22 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

உலகத்திலே நமக்கும் உபத்திரவங்கள் தான் இருக்கிறது
Joh 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

இயேசு கிறிஸ்துவினிமித்தம் நமக்கு பாடுபடுகிறதற்கும் அருளப்பட்டு இருக்கிறது
Phi 1:29 ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.
Phi 1:30 நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.

நமக்கு மரணபரியந்தம் சோதனைகளுக்கும் போராட்டங்களும் உண்டு
நாம் பாடுகள் மூலமாக தான் நாம் பூரணப்பட முடியும்
Heb 2:10 .... அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
1Pe 2:21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

இயேசு கிறிஸ்து நமக்கு கொடுப்பது இந்த பூமிக்குரிய சமாதானம் அல்ல அவர் நமக்கு கொடுப்பது ஆவிக்குரிய சமாதானம்
Joh 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.

சமாதானம் சமாதானம் என்று போதிக்கக்கூடிய கள்ள போதகர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்
Eze 13:10 சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.
Eze 13:18 ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?

1 comments:

  1. But in Luke 24:36 Jesus said peace be to you... what about that?

    ReplyDelete