மத்தேயு 1-ம் அதிகாரம் - கவிதை வடிவில் - Bro. Durai Daniel

மத்தேயு 1-ம் அதிகாரம் - கவிதை வடிவில் - Bro. Durai Daniel

மானுடம் ஒரு முத்தை ஈன்றது
மரியாள் என்ற பெயரில்
அந்த முத்து
ஒரு சொத்தை ஈன்றது
இயேசு என்ற பெயரில்

இயேசுவின் வரலாறு

கன்னி மரியாள்
கர்ப்பந்தரித்தாள்
பரலோக சொத்து
பரிசுத்த ஆவியால்
அவள் வயிற்றில்
வரவு வைக்கப்பட்டது

அண்டசாராசரம் செய்த
ஆண்டவர்
அடைக்கலமானார்
அன்னை மரியின்
கருவறையில்

பரிசுத்த ஆவி தந்தை
பரிசுத்த வித்து குமாரன்
கருவாகி உருவானார்

நிச்சயப்பூ
திருமண மாலையாகுமுன்னே
பழம் பழத்ததேவென எண்ணி
மனம் கலங்கிய
யோசேப்பு

அவமான அம்பெய்தால்
மலரினும் மெல்லிய
மரிமுகம் வதங்கிவிடுமென எண்ணி
இரகசிய திட்டமாய்
அப்புறப்படுத்தும் நாடகத்தை
அரங்கேற்ற எண்ணினான்

தலை நிறைய சந்தேகங்களுடனும்
மனம் நிறைய மயக்கங்களுடனும்
கண்ணீர்த் தலையணையில்
முகம் பதித்து முடங்கியவனை
ஆயிரம் வாட்ஸ் ஒளியொன்று
அதிரடியாய் எழுப்பியது

சந்தேகப்படாதே யோசேப்பே
சத்தியவதியுன் துணைவி
அவள் வயிற்றில் வந்தது
வையகத்தின் சொத்து
பரிசுத்த ஆவி வித்து

தேவதூத சத்தம் கேட்டு
பதறி எழுந்தான்
யேசேப்பு

தேவதூத வாய்
திரும்பவும் மொழிந்தது
பிறக்கும் பிள்ளைக்கு
இயேசென்று பெயரிடு

ஏனெனில் மானுட பாவமெல்லாம்
மறையச் செய்து இரட்சிப்பார்
என்று சொல்லி மறைந்தான்

முன்னமொரு காலத்தில்
மொழிந்தனரே தீர்க்கதரிசிகள்
உரைத்தபடி நடந்ததிதெல்லாம்

கன்னிகைக்கு பிறக்கும்
இம்மானுவேல் குழந்தை
தேவன் நம்மோடிருப்பாரென்பதே
இம்மானுவேலின் பொருளாகும்

தூதகட்டளை சிரமேற்கொண்டு
மனைவியெனும் மல்லிகையை
வாழ்வென்னும் மாலையில் பொதிந்தான்

குழந்தைப் பேறு கிட்டும்வரை
ரோஜாவாசம் அறியாதிருந்தான்

உலகமுண்டாக்கிய முதல்வர்
முண்னணையில் மலர்ந்தார் 

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்