நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலே நாம் ஜெயங் கொள்ள வேண்டியது அவசியமா?

நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலே நாம் ஜெயங் கொள்ள வேண்டியது அவசியமா? - Bro.Barnabas

அநேக கிறிஸ்தவர்கள் கீழே உள்ள காரியங்களை செய்தாலே பரலோகம் போய் விடலாம் என்று நினைக்கிறார்கள்

1) வேதாகமம் வாசித்தால் போதும்
2) இயேசுவை விசுவாசித்தால் போதும்
3) தேவனை விசுவாசித்தால் போதும்
4) பரிசுத்த ஆவியானரை விசுவாசித்தல் போதும்
5) ஆராதனைக்கு கலந்து கொண்டால் போதும்
6) காணிக்கை கொடுத்தால் போதும்
7) கைகளை உயர்த்தி ஜெபித்தால் போதும்
8) கைகளை தட்டிக் கொண்டு சத்தமாக இசையோடு பாடினால் போதும்
9) ஸ்தோத்திர பலிகளை சொல்லிக் கொண்டு இருந்தால் போதும்
10) இயேசுவை பற்றி பிரசங்கம் பண்ணினால் போதும்
11) ஞானஸ்நானம் எடுத்தால் போதும்
12) மனிதன் ஏற்படுத்தின கிறிஸ்தவ பண்டிகைகளை கொண்டாடினால் போதும்
13) பொய்யான அற்புதங்களை செய்தாலோ அல்லது பார்த்தாலே போதும்
14) பிசாசுகளை விரட்டினால் போதும்
15) சுவிசேஷ கூட்டங்களில் கலந்து கொண்டாலே போதும்
16) விசுவாசம் மட்டும் போதும்

இப்படி பலவகையான உபதேசங்களை பின்பற்றுகிறார்கள்

ஆனால் இந்த பூமிக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கையில் உலகத்தின் மீதும் பாவத்தின் மீதும் சோதனைகளின் மீதும் ஜெயங்கொள்ளாத பட்சத்தில் நமக்கு பரலோகமும் இல்லை பரலோகத்தில் பலனும் இல்லை

கிருபையினால் தேவன் நமக்கு ஆசீர்வாதங்களை தந்து விடுவார் என்று உங்களை ஏமாற்றும் ஊழியர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்

தேவனுடைய சகல கட்டளைகளையும் கைக் கொண்டு கிறிஸ்துவைப் போல பூரண புருஷராகும் போதுதான் தேவன் நமக்கு பரலோகத்தையும் அதற்கான பலன்களையும் நமக்கு கொடுப்பார்

பாவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தேவனுடைய கிருபை நம்மை காப்பற்றும் என்று கனவு கண்டு இருப்போம் என்றால் கிறிஸ்து வரும் போது நாம் ஏமாந்து தான் போவோம்

தேவனுடைய கிருபை வேண்டுமென்றால் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் போது அதை அவர் கொடுக்கிறார்

யாருக்கும் தேவன் கிருபையை இலவசமாக கொடுப்பதில்லை

ஜெயங் கொள்ளும் போது தான் தேவன் வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை நமக்கு கொடுக்கிறார்

கீழே உள்ள வசனங்களை தயவு செய்து வாசித்து பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்
1) Rev 2:7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

2) Rev 2:10 .... ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
Rev 2:11 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

3) Rev 2:17 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.

4) Rev 2:25 உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
Rev 2:26 ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
Rev 2:27 அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
Rev 2:28 விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
Rev 2:29 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

5) Rev 3:5 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.

6) Rev 3:12 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.

7) Rev 3:21 நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

1Co 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
1Co 15:58 ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்