பகுதி:4 தலையணை உபதேசங்கள் (கள்ள உபதேசங்கள்)

பகுதி:4 தலையணை உபதேசங்கள் (கள்ள உபதேசங்கள்)

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் இயேசு கிறிஸ்து வீடுவாசலை ஏற்படுத்தி தருகிறாரா? - Bro. Barnabas

இன்றைக்கு அநேக கள்ளபோதகர்கள் நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு எங்களுக்கு காணிக்கை கொடுத்தால் உங்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்கு உதவி செய்கிறார் என்று இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களை பண்ணுகிறார்கள்

பின்பு ஒரு சிலரை மேடையேற்றி நான் இவ்வளவு காணிக்கை கொடுத்தேன் இயேசு கிறிஸ்து நான் சொந்தமாக வீட்டை கட்டுவதற்கு பண உதவி செய்தார் சாட்சி வேறு சொல்ல வைக்கிறார்கள்

இந்த பூமிக்குரிய வாழ்க்கைக்கு தேவன் நமக்கு என்ன வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார் என்று வேத வசனங்களோடு கற்றுக் கொள்ளுவோம்

இயேசு கிறிஸ்துவுக்கு இந்த பூமியிலே சொந்த வீடு இருந்ததா?

இயேசு கிறிஸ்துவுக்கு இந்த பூமியிலே தலை சாய்க்க கூட இட மில்லை
அவரைப்பின்பற்றிப்போனால் என்ன கிடைக்கும்?
Luk 9:57 அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
Luk 9:58 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
2Ti 3:12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.

அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் சபை ஸ்தாபிக்கப்பட்ட போது அங்கே இருந்த கிறிஸ்தவ விசுவாசிகள் என்ன செய்தார்கள் என்று பாருங்கள்
Act 2:44 விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
Act 2:45 காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.
Act 4:34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
Act 4:35 அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.

தங்களுடைய சொந்த நிலங்களை விற்று அவைகளை கொண்டு பகிர்ந்து கொடுத்து அதன் மூலமாக தேவனுடைய சத்தியத்தை அறிவித்தார்கள்

அப்போஸ்தலர்களுக்கு சொந்தமாக வீடுகள் இருந்ததா?
அவர்கள் தங்குவதற்கு இடங்கள் கூட இல்லை என்று தான் சொல்லுகிறார்கள்
1Co 4:11 இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.
1Co 4:12 எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.
1Co 4:13 தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.

தேவனுடைய உண்மையுள்ள பிள்ளைகள் இந்த பூமிக்குரியவைகளுக்காக ஒரு போதும் கவலைப்படமாட்டார்கள்

தேவனுக்கும் உலக பொருளுக்கும் நம்மால் ஊழியம் செய்ய முடியமா?
Luk 16:13 எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.

இன்றைக்கு இருக்கக்கூடிய அநேக போதகர்கள் தங்களுடைய கூட்டங்களில் சொல்லக்கூடிய வாக்குத்தத்தங்களை பாருங்கள்
1) வீடு வாசலை ஏற்படுத்தி தருகிறார்
2) கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை
3) சொத்து பிரச்சனையிலிருந்து விடுதலை

இப்படி அநேக பூமிக்குரிய காரியங்களை போதித்து ஜனங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்

தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் என்ன வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார் என்று பாருங்கள்

நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடும் போது அவர் நமக்கு செய்யக்கூடிய வாக்குத்தத்தம் இது தான்
1) உணவு
2) உடை

இது மாத்திரமே கிறிஸ்தவர்களுக்கு பூமிக்குரிய வகையில் அவர் நமக்கு செய்த வாக்குத்தத்தம்
Mat 6:28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;
Mat 6:29 என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Mat 6:30 அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
Mat 6:31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
Mat 6:32 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
Mat 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
Mat 6:34 ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.

பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு தேவன் என்ன கட்டளை கொடுக்கிறார் என்று பாருங்கள்
1Ti 6:6 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1Ti 6:7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
1Ti 6:8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.

எங்களுக்கு காணிக்கை கொடுத்தால் தேவன் உங்களுக்கு வீடு கட்ட உதவி செய்வார் என்று சொல்லக்கூடிய கள்ளபோதகர்களை ஒருபோதும் நம்பாதீர்கள்
Phi 2:21 மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
Phi 3:18 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
Phi 3:19 அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
Rom 16:18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

1 comments: