கிறிஸ்தவர்கள் திரைப்படங்களையும் நாடகங்களையும் விரும்பலாமா ?
கிறிஸ்தவர்கள் திரைப்படங்களையும் நாடகங்களையும் விரும்பலாமா?
இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் திரைப்படங்களுக்கும் நாடகங்களுக்கும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்
பிசாசானவன் இன்றைக்கு இப்படிப்பட்ட பொழுது போக்கு அம்சங்கள் மூலமாக பெரும்பாலும் எல்லா கிறிஸ்தவர்களை அடிமையாக வைத்து இருக்கிறான்
1Pe 5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
அநேகர் இந்த திரைப்படங்களினாலும் நாடகங்களினாலும் நாவல்களினாலும்(கதைகளினாலும்) பிசாசானவனால் விழுங்கப்பட்டு விட்டார்கள்
நிறைய குடும்பங்களில் சீரியல் நாடகங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்
இன்னும் அநேக குடும்பங்கள் திரைப்படங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்
2Pe 2:19 தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.
இன்றைய கிறிஸ்தவ குடும்பங்களில் தங்கள் பிள்ளைகளோடு கூட உட்கார்ந்து சீரியல் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். தங்கள் ஒருவேளை பார்க்க முடியாவிட்டால் தங்கள் பிள்ளைகளிடம் இன்றைக்கு நாடகத்தில் என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்து கொள்ளுகிறார்கள்
அப்படிப்பட்ட நாடகத்தில் வரக்கூடிய எல்லா காட்சிகளும் ஆபாசமான வசனங்களும் உங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால கிறிஸ்தவ வாழ்க்கையை அழித்து போட்டு விடும் என்பதை இன்னும் அநேகர் உணராமல் இருக்கிறார்கள்
திரைப்படங்களையும் சீரியல் மற்றும் நாடகங்களையும் எடுப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்?
அதில் நடிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்?
இந்த திரைப்படங்களையும் நாடகங்களை (சீரியல்) நாவல்களையும் கதைகளையும் குறித்து கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்,
1) பொய்யான கதாபாத்திரங்கள்
2) பொய்யான கதைகள்
3) அந்த கதாபாத்திரத்திற்கு பொய்யான பெயர்கள்
4) பொய்யான வசனங்கள்
5) பொய்யான நடிப்பு
6) பொய்யான கோபங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், அழுகைகள்
7) பொய்யான இடங்கள்
8) பொய்யான உறவுகள்
இதில் ஏதாவது உண்மை சம்பவங்கள் இருக்கிறதா?
இதை உருவாக்கக்கூடிய அனைவரும் பொய்யர்கள் இவர்களை பற்றி தேவன் என்ன சொல்லுகிறார்
Rev 22:15 ..... பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
பொய்யை விரும்பு அதின்படி செய்கிற என்று தமிழில் வேதாகமத்தில் வந்து இருக்கிறது ஆனால் கிரேக்க வேதாகமத்தில் பொய்யை உருவாக்குகிற யாவரும் என்று வந்து இருக்கிறது
பொய்யை உருவாக்கி அதை திரைப்படங்களாகவும் அதை சீரியல் நாடகங்களாகவும் நாவல்களாகவும் உருவாக்கிறவர்கள் யாவரும் புறம்பே இருப்பார்கள் என்று தேவன் சொல்லுகிறார்
அந்த பொய்யை விரும்புகிறவர்கள் யாவரும் புறம்பே இருப்பார்கள் என்கிறார்கள்
பொய்யை உருவாக்குகிறவர்களும் அந்த பொய்யை விரும்புகிறவர்கள் யாவரும் புறம்பே இருப்பார்கள்
Rev 21:8 ...... பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
பாருங்கள் இந்த திரைப்படங்கள் நாடகங்கள் நாவல்கள் எல்லாம் பொய்யாய் இருக்கிறது அதை விரும்பி பார்க்கும் போது பொய்யை விரும்புகிறோம் விரும்பி படிக்கும் போது பொய்யை விரும்புகிறோம்
அப்படியானால் அதை உருவாக்குகிறவர்களும் அதை விரும்பி பார்க்கிறவர்களும் அதை படிக்கிறவர்களும் பரலோகத்தில் பிரவேசிக்க முடியுமா?
Rev 21:27 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.
திரைப்படங்களும் நாடகங்களும்(சீரியல்) நாவல்களும்(எல்லா கதைகளும்) தேவனுடைய பார்வையில் தீட்டுள்ளது அருவருப்பானது
இன்றைய செய்திதாள்களில் சமீபத்தில் மனைவி சீரியல் நாடகம் பார்த்து கொண்டு இருந்து போது சேனலை கணவர் மாற்றி விட்டார் என்பதற்காக தன் உடம்பில் தீ வைத்து கொண்டாள், அவளை காப்பாற்ற போன கணவனும் தீயில் கருகி இருவருமே மரித்து போய் விட்டார்கள் ஒவ்வொரு இடத்திலும் இதே போல் அநேக சம்பவங்கள் நடக்கிறது
இப்படிப்பட்ட நாடகங்களையும் திரைப்படங்களையும் பார்த்து அநேக உறவுகள் முறிந்து போய் இருகிறது.
2Ti 4:4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
நமக்கு நித்திய ஜீவன் வேண்டும் என்றால் இப்படிப்பட்ட காரியங்களுக்கு விலகி நம்மை காத்துக் கொள்ள வேண்டும்
1Ti 6:20 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.
1Ti 6:21 சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.
நான் இங்கு எழுதின என்னுடைய சொந்த வாக்கியங்கள் நியாயத்தீர்ப்பு நாளிலே எரிந்து போய் விடும் ஆனால் இங்கே மேற்கோள் காண்பித்த தேவனுடைய வார்த்தை மாத்திரமே அக்கினியில் நிற்கும் அதை மாத்திரம் விசுவாசியுங்கள் அதற்கு மாத்திரமே கீழ்ப்படிந்து நடப்போம்
1Co 3:13 அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.
1Co 3:14 அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்