கிறிஸ்தவக் குடும்பம்: ஒரு கணவனுக்கு யார் பெண் தோழியாக (Girl friend) இருக்க முடியும்?

செய்தி: Ariyel Barnabas

பாடம்:1 கிறிஸ்தவக் குடும்பம் 

ஒரு கணவனுக்கு யார் பெண் தோழியாக(Girl friend) இருக்க முடியும்?

கிறிஸ்தவக் குடும்பத்தை சேர்ந்த புருஷன் தன் மனைவியினிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தேவன் என்ன கட்டளையிட்டு இருக்கிறார் என்று பார்ப்போம்

1) இந்த பொல்லாத உலகத்தில் அநேக கிறிஸ்தவ ஆண்களுக்கு பெண் தோழிகள்(Girl friend) இருக்கிறார்கள். அநேக கிறிஸ்தவ பெண்களுக்கு ஆண் தோழர்கள் (Boy friend) இருக்கிறார்கள். உலகத்தில் இன்றைக்கு பெண் தோழிகள் இருப்பதும் ஆண் தோழர்கள் இருப்பதும் பெருமையான விசயமாக கருதுகிறார்கள். இன்றைக்கு அநேக கள்ள உறவுகளும் அநேக விவாகரத்துகளும் அநேக கொலைகளும் இப்படிப்பட்ட உறவுகளினால் தான் ஏற்படுகிறது.

2) ஒரு கணவனுக்கு தேவனுடைய வசனத்தின்படி பெண் தோழி(Girl friend) யாராக தான் இருக்க முடியும்?

Mal 2:14 …. கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே.

தேவன் மனைவியைப் பற்றி இரண்டு காரியங்களை வெளிப்படுத்துகிறார்

1) மனைவி உன் தோழி
2) அவள் உன் உடன்படிக்கையின் மனைவி

இதற்கு யார் சாட்சியாக இருக்கிறார்?

Mal 2:14 ... கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்;

நாம் உடன்படிக்கையின் மூலமாக தான் திருமணம் செய்கிறோம் அந்த உடன்படிக்கையை மரணபரியந்தம் சரியாக இருவரும்(கணவன் மற்றும் மனைவி) கடைபிடிக்கிறோமா என்பதில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் தேவன் தான் அதற்கு சாட்சியாக இருக்கிறார்

3) கணவனுக்கு அவளுடைய மனைவி மாத்திரமே தோழியாக (Girl friend) இருக்க முடியும். மனைவிக்கு அவளுடைய கணவன் மாத்திரமே தோழனாக (Boy friend) இருக்க முடியும்.

நம்முடைய கணவன் தவிர வேறு யாராவது நமக்கு தோழனாகவே (Boy friend) அல்லது நம்முடைய மனைவி தவிர வேறு யாராவது நமக்கு தோழியாகவே(Gril friend) இருந்தால் அது தேவனுடைய பார்வையில் வேசித்தனமாக இருக்கிறது. Jam 4:4 விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

4) இந்த தேவனுடைய கட்டளையை நாம் பின்பற்றினால் நாம் பாவம் செய்வோமா?

1Ti 5:1 முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும்,
1Ti 5:2 முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு.

தேவன் ஒவ்வொரு கிறிஸ்தவ சகோதரனுக்கும் சகோதரிக்கும் கட்டளையிட்டு இருக்கிற சத்தியம் இது தான்

முதிர்வயதுள்ள ஆண்கள் - தகப்பன்
பாலிய புருஷர்கள் - சகோதரர்கள்
முதிர்வயதுள்ள ஸ்திரீகள் - தாய்கள்
பாலிய ஸ்திரீகள் - எல்லா கற்புடன் உள்ள சகோதரிகள்

இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் இந்த வசனங்களுக்கு எல்லாம் செவி கொடுப்பதில்லை

5) பெண் தோழிகளை உடைய புருஷர்கள் தங்கள் மனைவியை ஏமாற்றலாம் அல்லது ஆண் தோழர்களை உடைய மனைவிகள் தங்கள் புருஷர்களை ஏமாற்றலாம் ஆனால் தேவனை அவர்களால் ஒருபோதும் ஏமாற்ற முடியாது
* Mal 2:14 ... கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்
* Ecc 12:13 காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
* Ecc 12:14 ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.

கர்த்தருக்கு சித்தமானால் கிறிஸ்தவ குடும்பத்தைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்