பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளுங்கள் - Bro. Durai Daniel
பாலியல் உறவு மட்டுமல்ல. பாலியல் தூண்டுதலும் திருமண உறவுக்காகவே
படைக்கப்பட்டது.பாதுகாப்பான இன்பமும், இனவிருத்தியுமே அதன் நோக்கம்.
அதற்காகவே தேவன் அதை உண்டாக்கினார்.
ஆனால் இன்றைய வாலிபர்களும், வாலிப பெண்களும் வேறு மாதிரியான கருத்து கொண்டுள்ளனர். அதாவது பாலியல் தூண்டுதல் கொடுப்பதிலோ பெறுவதிலோ தவறில்லை. ஆனால் பாலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம் என்கின்றனர். நோ. இல்லை. அப்படி இல்லவே இல்லை. பாலியல் அனுபவத்தைப் பெற உடம்பை தயார் படுத்தவே இந்தப் பாலியல் தூண்டுதலை (Sexual arousal) தேவன் படைத்துள்ளார். தூண்டுதல் பெற்ற உடல் பாலியல் உறவில்தான் (Intercourse) திருப்தியடையும். அதுவரை உடல் திருப்தியடையாது. ஆகவே பாலியல் தூண்டுதலை அனுபவித்து விட்டு உடலுறவு மட்டும் செய்ய மாட்டேன். அப்படிப்பட்ட சுயகட்டுப்பாடு எனக்கு உண்டு என்பது சுத்த பைத்தியக்காரத்தனம். நெருப்போடு விளையாடிவிட்டு காயம்படாமல் தப்பிப்பது கூடாத காரியம்.
போன் பேசுவது, கடிதம் எழுதுவது, நெட் சாட்டில் உணர்ச்சி பொங்க உரையாடுவது, நேரில் சந்திப்பது, நெருங்கி அமர்ந்து பேசுவது, தொட்டு பேசுவது, இரட்டை அர்த்த வசனங்களோடு உரையாடுவது, ஆபாச உணர்வுகளைத் தூண்டும் வகையிலான சினிமா பார்ப்பது, பத்திரிக்கை படிப்பது, இணையதளங்களை பார்வையிடுவது, etc... இவை போன்ற பல காரியங்கள் பாலுணர்வைத் தூண்டிவிடும் காரணிகளாகும். இவைகளில் ஈடுபட்டுவிட்டு பாவம் செய்யாமல் தப்பிப்பது கூடாத காரியம். ஆகவே இனி யாரும் பாலியல் உறவுக்கு மட்டுமல்ல பாலியல் தூண்டுதலுக்கும் விலகியோடுங்கள். பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளுங்கள். மணவாளன் வரும்போது கற்புள்ள கன்னிகையாக உங்களை ஒப்புக்கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்க இயேசு நாமம்!

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்