வாழ்வின் சுமை அகற்றும் தாழ்மையின் வழி!
வாழ்வின் சுமை அகற்றும் தாழ்மையின் வழி!
"வாழ்க்கையின் சுமையானது" அதைத் தாங்கவொண்ணாததாயிருக்கிறது என்று நாம் எண்ணிக்கொள்ளுகிறோம்! ஆனால் உண்மையென்னவென்றால், நம்மைக்குறித்து வைத்துள்ள மேட்டிமை எண்ணங்களான பெருமைதான் இதற்கெல்லாம் காரணம்! இதைகுறித்து ரிசர்வ் செய்யாத நெரிசலான புகைவண்டியில் பயணம் செய்யும் சமயங்களில் நான் தியானித் திருக்கிறேன். உட்காருவதற்கு இடமில்லாமல், தரையின் ஓர் மூலையில் உட்காரவோ அல்லது சில சமயங்களில் நின்றுகொண்டு வரவோ வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. புகைவண்டிப் பெட்டியோ, ஸ்டேஷன் ஆரம்பத்திலிருந்தே ஜனங்களாலும், சாமான்களாலும் நிறைந்திருக்கும். அடுத்து ஒவ்வொரு ஸ்டேஷனில் நிற்கும்போதும், மேலும் அதிக ஜனங்களும் சாமான்களும் ஏறுவதால் நிலமை மிக மோசமாகிவிடும்! தொடர்ந்து நெருக்கடி அதிகமாகிக் கொண்டேதான் போகும்!! இச்சமயங்களில், "நான் இப்போது ஒரு எறும்பின் அளவாய் (size) மாறமுடியுமென்றால் எனக்கு இந்த நெரிசல் இருக்காதே!" என எனக்குள் சிந்திப்பதுண்டு. ஆம், ‘அளவினிமித்தமே’ நெருக்கடி அதிகமாயிருப்பதை உணர்கிறேன். என்னைவிடப் பருமனான அளவு கொண்ட ஓர் மனிதனின் கதி இன்னமும் மோசமானதுதான்! நெருக்கடியெல்லாம் "அளவைப்" பொருத்தே இருக்கிறது. ஆனால் ஒரு சிறிய எறும்போ, நெரிசலான ரயில் பெட்டியையும் விசாலமான இடமாய் கருதி, அங்குள்ள நெரிசலைக்குறித்து கொஞ்சமும் குறை கூறாது!
இதுவே ஆவிக்குரிய விடையையும் நமக்கு அளிக்கிறது. நெருக்கத்தின் சுமை என்னைச் சுற்றிலும் அதிகரிக்கும்போது, நான் மாத்திரம் என் கண்களுக்கு சிறியதாய்…… சிறியதாய், மாற முடியுமென்றால், நெருக்கடியானது குறைந்து சீக்கிரமே ஒன்றுமில்லாமல் மறைந்தும்விடும்!! தேவன் "நம்மைக் குறைத்து" சிறியதாய் மாற்றவே விரும்புகிறார். அவர் தன் நோக்கத்தை நம் மூலமாய் நிறைவேற்றுவதற்கு முன்பாக நம்மைக் குறைத்து, குறைத்து, நம்முடைய சுய எண்ணத்தில் "பூஜ்ய நிலைக்கு” நம்மை கொண்டுவர வேண்டியதாயிருக்கிறது. பரிபூரண ஜீவனுக்குள் நடத்த "நம்மை நாமே தாழ்த்தும்" இயேசு முன்நடந்த இந்த "இடுக்கமான வழியை" கண்டுகொண்டவர்கள் வெகு சிலராகவே இருக்கிறார்கள்!!
Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்