திராணிக்குமேல் நாம் சோதிக்கப்படுவதில்லை!

நாம் ஆவிக்குரிய வளர்ச்சியற்று, பெலவீனமாய் இருக்கும்போது, மனுஷர் மூலமாகவோ பிசாசின் மூலமாகவோ கொடூரமாய்த் தாக்கப்பட தேவன் அனுமதிக்கவே மாட்டார்!! நம் வாழ்க்கையில் தேவன் வைத்திருக்கும் நோக்கத்தின்மேல் நமக்கு விருப்பம் இல்லையென்பதைத் தேவன் காணும்போது, நம் ஜீவியத்தில் நாம் மிக எளிதான பாதை செல்லவும் அனுமதித்து விட்டுவிடுவார்! இதன் விளைவாய் நாம்தான் நித்தியத்தில் பேரிழப்பைத் தழுவி நிற்போம்!!
ஏனெனில், "தாங்கிக்கொள்ள முடியும்" என்ற பக்குவநிலை அடைந்தவர்கள் மிகவும் சிலரே! இவ்வித ஆவிக்குரிய முதிர்ச்சியை அடைவதற்கு மிகச்சிலர்தான் விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.
நாம் சந்திக்கக்கூடிய எல்லா சோதனைகள் வழியாகவும், பிதாவினால் இயேசுவானவர் அழைத்துச் செல்லப்பட்டார். இப்படித்தான் அவர் பூரணரானார்! (எபிரெயர் 4:5, 5:7-9) நாமும் பூரணராவதற்கு இதைத் தவிர வேறு வழியே இல்லை!
"நாம் திராணிக்கு மேலாக சோதிக்கப்படவோ அல்லது பரீட்சிக்கப்படவோ தேவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்" என்ற சத்தியம்தான் நம் வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் நாம் ஜெயஜீவியம் செய்திட முடியும் என்ற நம்பிக்கைக்குக் காரணமாயிருக்கிறது!!
இவ்விதமாய் 1கொரிந்தியர் 10:12 மூலம் தேவனுடைய உத்திரவாதம் நமக்கு கொடுக்கப்படவில்லையென்றால், நாம் இப்படிப்பட்ட நம்பிக்கை கொள்ளவே முடியாது!!
ஆம், நம் பாதைக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு சோதனையும் பரீட்சையும் ஜெயிக்கப்படத்தக்கதே என தேவன் உத்திரவாதம் அளித்திருக்கிறார். இவ்வாறிருக்க நாம் ஏன் வீழ்ச்சியடையவேண்டும்?
Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்