செய்தி: எந்நிலையிலும் மகிழ்ச்சி இழக்காத ஜீவியம்!
எந்நிலையிலும் மகிழ்ச்சி இழக்காத ஜீவியம்! - சகரியா பூணன்
"சில சமயங்களில், நாம் திடீரென்று பணத்தை இழக்கவோ அல்லது மனசாட்சியற்ற மக்களால் ஏமாற்றப்படவோ" தேவன் ஏன் அனுமதிக்கிறார்? நம்மில் அநேகர் நெரிசலான புகைவண்டியில் அல்லது பஸ்களில், நம் பணம் "பிக்பாக்கெட்" அடிக்கப்படும் அனுபவத்தையும் அடைந்திருக்கிறோம். நானோ, இவ்விதமான நேரங்களை இந்தத் திருடர்கள் அல்லது ஏமாற்றுக்காரர்களுக்காய் ஜெபிக்கும் நல்ல தருணமாகவே எடுத்துக்கொள்கிறேன். இவையெல்லாவற்றிற்கும் மேலாக தேவன் அதிகமாய் விரும்புவதெல்லாம், பணத்தோடும் - உலகப்பொருட்களோடும் உள்ள நம்முடைய அசாதாரணமான பிடிப்பிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்பதேயாகும்! நாம் இழந்த ஒவ்வொரு ரூபாயையும் விரல்விட்டு எண்ணி ஏங்கிக் கவலைகொள்ளவோ நாம் லாபமடையும் ஒவ்வொரு பணத்திற்காகவும் மகிழ்ச்சியடையவோ தேவன் ஒருபோதும் விரும்புவதில்லை! ஆம், நாம் "அவரில்" களிகூர்ந்து மகிழ்ந்திருக்கவே அவர் விரும்புகிறார். இந்த மகிழ்ச்சி எப்படிப்பட்டது? உலக லாபம் கிடைத்துவிட்டதால் கூடவோ, அல்லது உலக நஶ்டத்தால் சற்றும் குறையவோ முடியாத மாறாத மகிழ்ச்சி!
இப்பூமியில் இயேசு இவ்விதமாய்த்தான் நடந்துகொண்டார். இப்போது "நாமும் அவர் நடந்தபடியே நடப்பதற்கு அழைக்கப்படுகிறோம். "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" (பிலிப்பியர் 2:5) என்றல்லவா வேதம் கூறுகிறது. இயேசுவுக்கு யாராவது, அவருடைய ஊழியத்தால் ஆசீர்வதிக்கப்பட்டதினிமித்தம் நன்றியுணர்வோடு "பத்தாயிரம் ரூபாய்" கொடுத்திருப்பார்களென்றால், இச்செயல் அவருடைய சந்தோஶத்தை இம்மி அளவுகூட அதிகரிக்க முடிந்திருக்காது! ஏனெனில் அவர் பிதாவின்மேல் வைத்த சந்தோஶம் "ஏற்கனவே" நிறைந்ததாகவும், வழிந்தோடுவதாகவும் இருந்தது!! அதுப்போலவே, உலகப்பொருட்களின் நஶ்டத்தாலும் அவருடைய சந்தோஶம் குறைந்திட முடியாததாய் இருந்தது! இயேசுவுக்கு அன்பளிப்பாய் வந்த அதிகமான பணத்தை யூதாஸ்காரியோத்து சுரண்டி சுரண்டி திருடிக் கொண்டிருந்தான். இயேசுவும் இதை நன்கு அறிந்திருந்தார். அவர் யூதாஸ்காரியேத்துக்காக மனம் வருந்தினாலும், தான் இழந்த பணத்திற்காக ஒருபோதும் ‘மனக்கிலேசம்’ அடையவேயில்லை!
உங்களைக் குறித்து என்ன? உலகப் பொருட்களினிமித்தம் உங்கள் சந்தோஶம் கூடவோ குறையவோ முடிகிறதா? அப்படியென்றால், நீங்கள் உங்களை நீங்களே நியாயந்தீர்த்து, இப்படிப்பட்ட மனோபாவத்திலிருந்து இரட்சிப்படையும்படி பயத்தோடும் நடுக்கத்தோடும் பிரயாசப்பட வேண்டியது மிகவும் நிர்ப்பந்தமான அவசியமாகும்!!
Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்