ஒவ்வொரு பாடுகளிலும் ஓர் தேவ நோக்கம் உண்டு - செய்தி
ஒவ்வொரு பாடுகளிலும் ஓர் தேவ நோக்கம் உண்டு! - சகரியா பூணன்
"நம் வாழ்க்கையில் குறிக்கிட தேவன் அனுமதிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் அவருடைய "மகிமையான நோக்கம்" ஒன்று உண்டு என நாம் கண்டுகொள்வோமென்றால், அது எத்தனை பெரிய மகிழ்ச்சியான அற்புத வாழ்க்கை! அவர் நம்முடைய ஜெபங்களுக்கு "இல்லை" என்று பதிலுரைத்தாலும், அதுவும் அவரது பூரண அன்பின் இருதயத்திலிருந்தன்றோ பிரவாகிக்கிறது!!
வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களைக் கடிக்கும்படி தேவன் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பினாரே, அதுவும் அவரது அன்பின் கிரியை தானோ?(எண். ௨௧:6). நிச்சயமாக அப்படித்தான்! ஏனெனில், இதன் மூலம்தான் தேவன் அவர்களை மனந்திரும்பும்படிச் செய்து, தான் அவர்களை ஆசிர்வதிக்கும்படி அவரிடம் அவர்களைத் திரும்பக் கொண்டுவர முடிந்தது! அவரோ அவர்களை ஆசீர்வதிக்க விரும்பினார்... ஆனால், அவர்கள் மனந்திரும்பும்வரையில் அது அவரால் கூடாத காரியமாய் இருந்தது!!
" நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற திட்டங்களை நான் அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக் கேதுவான நினைவுகளே. அது உங்களுக்கு எதிர்கால முடிவையும் நம்பிக்கையையும் கொடுக்கும்" என்றே கர்த்தர் உரைக்கிறார்! (எரேமியா ௨௯:௧௧).
இவ்வுலகமானது, நோய் நொடிகளாலும், விஶப்பாம்புகளாலும் நிறைந்த பாதுகாப்பற்ற இடமாய் தேவன் அனுமதித்ததற்கு ஓர் காரணம் உண்டு! அதென்னவெனில், ஜனங்கள் தங்கள் துன்பத்தில் தன்னிடம் திரும்பவும், அவர் அவர்களை ஆசிர்வதிக்கவுமே ஆகும்!! எனவே, சாத்தான் கொண்டுவரும் எல்லாத் தீமையானவைகளையும் தேவன் எவ்வாறு தன் நோக்கம் நிறைவேறும்படி கிரியை செய்ய உபயோகிக்கிறார் என்பதை இப்போது நாம் காணமுடிகிறது! நித்தியத்திற்குள் பிரவேசித்தவர்களை நாம் கண்டு, பாம்புக் கடியையும்; பொருளாதார நெருக்கடியையும்; புற்றுநோய் போன்றவற்றையும் தேவன் எவ்வாறு உபயோகித்து அவர்களைப் பாவத்திலிருந்து விலக்கி அவருடைய பிள்ளையாய் மாறும்படிச் செய்தார் என்று கேட்கும்போது, நாம் இச்சத்தியத்தைப் பூரணமாய் அறிந்து கொள்ளுவோம்! மேலும், தேவன் எவ்வாறு பாடுகளை உபயோகித்துத் தன் பிள்ளைகளைப் பரிசுத்தப்படுத்தவும், அவருடைய சுபாவத்தை அடையவும் செய்தார் என்றும் அன்று கேட்டறிவோம்!!
இன்று, நாம் பூமியில் அறிந்துகொள்ள முடியாதவைகளை அந்நாளில் அறிந்து கர்த்தரை ஸ்தோத்தரிக்கப் போகிறோம்! இருப்பினும், விசுவாசிக்கும் ஓர் தேவ மனிதன் அந்நாளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. அவன், தேவனுடைய ஞானத்தையும்; அன்பையும் இப்போதே விசுவாசித்து, எல்லாவற்றிற்காகவும் இப்போதே ஸ்தோத்தரிக்க ஆரம்பிப்பான்!

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்