பணத்தைவிட தேவனே நமக்கு மேலானவர் !
பணத்தைவிட தேவனே நமக்கு மேலானவர் !
இந்த உலகில் பணம் மிகவும் வலிமை நிறைந்ததாய் இருக்கிறது! எனவேதான், நாம் சேவிக்கும்படி இரண்டே எஜமான்கள்தான் இருக்கின்றனர் என தேவனையும், உலகப்பொருளையும் தனித்தனி எஜமானாக இயேசு குறிப்பிட்டு கூறினார் (லூக்கா 16:13). இந்த உலகம் பணத்தின் வலிமையை நம்புகிறபடியால் "பணத்தினால் எல்லாம் கூடும்" என்கிறார்கள். விசுவாசிகளாகிய நாமோ "தேவனால் எல்லாம் கூடும்" என்கிறோம். ஆனால் அதிகபட்சமாய், அவிசுவாசிகள் தங்கள் தேவன் (பணத்தின்) மேல் வைத்துள்ள விசுவாசமானது, ‘ஜீவனுள்ள மெய் தேவனின் விசுவாசிகள்’ என தங்களைக் கூறிக் கொள்பவர்கள் வைத்திருக்கும் விசுவாசத்தைவிட அதிகமாய் உள்ளதே!?
இவ்வுலகில் நாம் அனுதினமும் பணவிஷயத்தில் ஈடுபாடு கொள்வதால், இப்பகுதியிலும் நாம் ஜெயம்பெற வேண்டியது மிகவும் அவசியமாயிருக்கிறது! நீங்கள் விண்ணப்பம் செய்யும் பெர்மிட்டோ அல்லது லைசென்ஸோ அல்லது இதுபோன்ற வேறெதுவோ "பாஸாகுவதற்கு" உங்களிடம் லஞ்சம் கேட்கும் கறைபடிந்த அதிகாரிகளை காணும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த உலகமோ லஞ்சத்தினால் எதையும் சாதித்துவிடலாம் என்று நம்புகிறது! நம்மைக்குறித்து என்ன? பணம் சாதிப்பதைவிட நம் தேவன் பெரிய அற்புதங்களை செய்ய முடியாதா? ஆனால் இதற்கென நமக்கு விசுவாசம் இல்லாதிருக்கும்போது, தேவன் நம் பட்சத்திலிருந்து ஒருக்காலும் கிரியை செய்யவே முடியாது. இவ்வுலகில் "கூடாதது ஒன்றுமில்லை" என்பதற்கு இரண்டு நபர்களே இருக்கிறார்கள் என இயேசு கூறினார். ஒன்று தேவன்! இரண்டாவது "மெய்யாய் விசுவாசிக்கும்" ஓர் விசுவாசி!! (மாற்கு 10:27 ; 9:23).
1) தேவனாலும் 2) விசுவாசிக்கிறவனாலும், கூடாதது ஒன்றுமில்லை! இது கிட்டதட்ட நம்பமுடியாததொரு அற்புதமேயாகும். ஆனால் உண்மையாகவே இந்த விசுவாசத்திற்கு, சர்வவல்ல தேவனின் வல்லமையோடு நம்மை இணைப்பதற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. இப்படிப்பட்ட விசுவாசத்தாலேயே, நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகத்திற்கு, "தேவன் பணத்தைவிட மேலானவர்" என்று நாம் நிரூபித்துக் காட்டவேண்டும்! நாம் லஞ்சம் கொடுப்பதே இல்லை! மெய் விசுவாசத்துடன் சர்வவல்ல நம் தேவனிடம் ஜெபிக்க மத்திரமே செய்கிறோம்!!
Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்