தலையணை உபதேசங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
தலையணை உபதேசங்கள் - Bro. Barnabas
தலையணை உபதேசங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
தலையணை உபதேசங்கள் என்றால் என்ன?
தலையணை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பது நமக்கு நன்றாக தெரியும்
நாம் இரவு நேரத்தில் இந்த தலையணை மீது தலை வைத்துப்படுத்தல் சுகமான தூக்கம் வரும்
இந்த தலையணையில் தூங்கி பழகியவர்களுக்கு அது இல்லாமல் அவர்களால் நிம்மதியாக தூங்க முடியாது
அதே போல் தான் பழையை ஏற்பாட்டில் இருந்த கள்ள தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்கு தலையணை போதனைகளை போதித்து அவர்களை தேவனைப் பற்றிய அறிவே இல்லாமல் செய்து விட்டார்கள்
Eze 13:16 எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
இந்த தீர்க்கதரிசிகள் போதித்து எல்லாம் என்ன உபதேசம் என்றால் உங்களுக்கு சமாதானம் சமாதானம் என்று தான் போதித்தார்கள்
Eze 13:10 சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.
இன்றைக்கும் அநேக கள்ள போதகர்கள் ஜனங்களிடத்திலே சமாதானம் சமாதானம் என்று தான் பிரசங்கமே செய்கிறார்கள்
சமாதானம் என்ற தலையணைகளை தான் அவர்கள் தைத்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்து இருந்தார்கள். அந்த ஜனங்கள் அந்த தலையணைகளை நம்பி மோசம் போனார்கள்
Eze 13:18 ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?
இன்றைக்கு நம்முடைய தேசங்கள் முழுவதும் இப்படிப்பட்ட அநேக கள்ளதீர்க்கதரிசிகள் இப்படிப்பட்ட அநேக தலையணைகளை தைத்து ஜனங்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள்
அவர்களுடைய தலையணைகளை பாருங்கள்
1) இயேசுவிடம் வாருங்கள் உங்கள் கடன் தொல்லையிலிருந்து விடுதலை
2) நோயிலிருந்து விடுதலை, பிசாசின் கட்டிலிருந்து விடுதலை
3) பில்லிய சூன்ய கட்டிலிருந்து விடுதலை
4) பூமிக்குரிய சகல ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும்
5) நீங்கள் வீடு கட்டலாம். கார் வாங்கலாம்
6) ஐசுவர்யவான்களாகலாம்
7) தேவன் உங்களை 100 மடங்கு ஆசீர்வதிப்பார்
8) சகலமும் சம்பூரணமாய் புரண்டு வரும்
9) நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்
10) திருமணம் கைக்கூடும்
11) குழந்தை பாக்கியம் கிடைக்கும்
12) உங்கள் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளைப் பார்க்கிலும் பேர் பெற்று விளங்குவார்கள்
13) குடும்ப பிரச்சனையிலிருந்து விடுதலை
14) குடியிலிருந்து விடுதலை
15) கெட்ட பழக்க வழக்கத்திலிருந்து விடுதலை
இன்றைக்கு இப்படிப்படிப்பட்ட தலையணைகளை உபதேசங்களினால் ஜனங்களை அடிமைப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்
இப்படிப்படி போதிக்கிறவர்கள் தங்களுடைய இருதயத்தில் இருப்பதையும் தங்களுடைய ஆவியின் ஏவுதலினாலே போதிக்கிறார்கள்
Eze 13:2 ....தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Eze 13:3 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!
இப்படிப்பட்டவர்கள் வனாந்திர நரிகளுக்கு ஒப்பாய் இருக்கிறார்கள்
Eze 13:4 இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
இவர்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறார்கள்
Eze 13:6 கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.
இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்

அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறார்கள்
1) பிறந்த குழந்தைக்கு பங்காளர் திட்டம்
2) வளரக்கூடிய குழந்தைகளுக்கு பங்காளர் திட்டம்
3) வாலிபர்களுக்கு பங்காளர் திட்டம்
4) குடும்ப பங்காளர் திட்டம்
இன்னும் வகைவகையான பங்காளர் திட்டங்கள் எல்லாம் இருக்கிறது
இந்த திட்டங்களில் சேர்ந்து தங்களுடைய ஆத்துமாக்களை இந்த பொய் தீர்க்கதரிசிகள் வேட்டையாடுவது கூட தெரியாமல் காணிக்கை அனுப்பிக் கொண்டு இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை
இவர்கள் என்ன போதிக்கிறார்கள் என்று பாருங்கள்
Eze 13:19 சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடே இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடே காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்க்குச் செவிகொடுக்கிற என் ஜனத்துக்குப் பொய் சொல்லுகிறதினாலே சில சிறங்கை வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என் ஜனத்துக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
இவர்களுடைய வேலை என்னவென்று பாருங்கள்
Eze 13:22 நான் சஞ்சலப்படுத்தாத நீதிமானின் இருதயத்தை நீங்கள் வீணாய் முறியப்பண்ணினபடியினாலும், துன்மார்க்கன் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பவும் நான் அவனை உயிரோடே காக்கவுங் கூடாதபடிக்கு நீங்கள் அவனுடைய கைகளைத் திடப்படுத்தினபடியினாலும்,
இப்படிப்பட்ட கள்ள போதகர்கள் நீதிமானின் இருதயத்தை முறியப்பண்ணி, துன்மார்க்கரின் கைகளை பலப்படுத்துகிறார்கள்
தேவன் இவர்களுடைய உபதேசங்களை பொய்யாக்குவேன் என்று வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார்
Eze 13:20 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்கள் தழுவணைகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்கள் புயங்களிலிருந்து பிடுங்கிக் கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலை பண்ணி,
Eze 13:21 உங்கள் தலையணைகளைக் கிழித்து, என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்கள் கைகளில் இரார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
இந்த தலையணை உபதேசங்கள் புதிய ஏற்பாட்டுக்கு உபதேசத்துக்கு பொருந்தி வருமா என்று கர்த்தருக்கு சித்தமானால் கற்றுக் கொள்ளுவோம்

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்