பணஆசை எல்லாத் தீமைக்கும் வேராய் இருக்கிறது

செய்தி: Ariyel Barnabas
இன்றைக்கு இருக்கக்கூடிய அநேக பிரசித்த பெற்ற போதகர்கள் மக்களை நோக்கி: நீங்கள் கிறிஸ்துவினிடத்தில் வந்தால் உங்களுக்கு வீடு தருவார் கார் தருவார் உங்கள் கடன்களையெல்லாம் அடைப்பார் ஐசுவர்யம் தருவார் என்று தான் போதிக்கிறார்கள்
இதற்காக அப்படிப்பட்ட அநேகரை மேடை மீது அழைத்து சாட்சி சொல்ல வைக்கிறார்கள். இவர்களுடைய நோக்கம் என்னவென்றால் தங்களுடைய கூட்டம் நடைபெறும் இடங்களில் இப்படிப்பட்ட சாட்சிகளை ஏற்படுத்தி நீங்களும் எங்களுக்கு காணிக்கை கொடுத்தால் தேவன் உங்களை ஐசுவர்யவான்களாக்குவார் என்பது தான், கொடுக்கக்கூடிய ஜனங்கள் ஐசுவர்யவான்களாகுகிறார்களோ இல்லையோ அப்படி போதிக்கிற ஊழியர்கள் மிகப் பெரிய கோடீஸ்வரராகி விடுகிறார்கள்
நீங்கள் கர்த்தருக்கு தசமபாகம் கொடுங்கள் கர்த்தர் உங்களை 100 மடங்கு ஆசீர்வதிப்பார் என்று இப்படிப்பட்ட போதகர்கள் வாக்குத்தத்தம் செய்கிறார்கள். ஜனங்களுக்கு பண ஆசையை தூண்டி விடுகிறார்கள் ஜனங்கள் தங்களும் வீடு கட்ட வேண்டும் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்று நினைத்து இப்படிப்பட்டப்பட்டவர்கள் கடன் வாங்கியாவது பணத்தை அனுப்புகிறார்கள்
Ecc 5:10 பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.
Ecc 5:11 பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதைக் காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?
1Ti 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது....
இந்த வசனத்தில் பணம் எல்லாம் தீமைக்கும் வேராய் இருக்கிறதா? அல்லது பண ஆசை எல்லாத்தீமைக்கும் வேராய் இருக்கிறதா?
பண ஆசை தான் எல்லாத்தீமைக்கும் வேராய் இருக்கிறது
பணம் எல்லாவற்றிற்கும் உதவும் என்ற வேத வாக்கியம் போதிக்கிறது
Ecc 10:19 ... பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.
பணம் எப்படி நமக்கு எல்லாவற்றிற்கும் உதவும்?
1) நம்முடைய ஜீவனத்திற்கு தேவன் வாக்குத்தத்தம் செய்த உணவையும் உடையையும் அதில் வாங்க முடியும்
Mat 6:31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
Mat 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
2) வாரத்தின் முதல் நாளில் தேவனுடைய கட்டளையின் படி காணிக்கை கொடுப்பதற்கு பணம் நமக்கு உதவி செய்கிறது
1Co 16:2 நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன் தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
2Co 9:7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
3) யாவருக்கும் விசுவாச குடும்பத்தாருக்கும் நன்மை செய்வதற்கு பணம் தேவைப்படுகிறது
தரித்திரர்களுக்கு உதவி செய்தவற்கு பணம் தேவைப்படுகிறது
Gal 6:10 ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.
4) அரசாங்கத்திற்கு வரியையும் தீர்வையும் கொடுப்பதற்கு பணம் தேவைப்படுகிறது
Rom 13:6 இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.
Rom 13:7 ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.
ஆனால் இதற்கு மேல் ஐசுவர்யவான்களாக வேண்டும் என்று விரும்பும் போது தான் நமக்கு பிரச்சனையே எழும்புகிறது
1Ti 6:9 ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.
ஐசுவரியவான்களாக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இதில் நிச்சயம் விழுவார்கள்
1) சோதனை
2) கண்ணி
3) மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துக்கிற மதிகேடு
4) சேதம்
5) பலவித இச்சைகள்
கிறிஸ்தவர்கள் ஐசுவரியவான்களாக வேண்டும் என்று விரும்பினால்?
1Ti 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இது தேவனுடைய வாக்குத்தத்தம் நிச்சயம் ஒருபோதும் பெய்யாய் போகாது
இயேசு கிறிஸ்து பணப்பையை ஒரு போதும் தன்னிடத்தில் வைத்துக் கொள்ளவில்லை
அந்த பணப்பையை வைத்திருந்த யூதாஸ் காரியோத்தை குறித்து வசனம் என்ன சொல்லுகிறது என்று பாருங்கள்
Joh 12:6 அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
Joh 13:29 யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.
யூதாஸ் காரியோத் பணப்பையை வைத்து இருந்ததினாலே சோதனையில் விழுந்து இயேசு கிறிஸ்துவை காட்டி கொடுத்து அதில் வரக்கூடிய பணத்தையும் தன் பணப்பையிலே நிரப்புவதற்கு முயற்சி செய்தார்
அவருடைய முடிவை நாம் எல்லாரும் அறிந்து இருக்கிறோம்
Ecc 5:13 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.
Ecc 5:14 அந்த ஐசுவரியம் விக்கினத்தால் அழிந்துபோகிறது; அவன் ஒரு புத்திரனைப் பெறுகிறான், அவன் கையில் யாதொன்றும் இல்லை.
இந்த தேவனுடைய வாக்கியத்தை நாம் உணர்ந்தால் பண ஆசை நமக்கு இருக்குமா?
1Ti 6:8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.
Ecc 5:15 தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை.
1Ti 6:7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
பங்களார் திட்டம் என்று ஜனங்களை கொள்ளையடிக்கும் கும்பல்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்
1Co 15:19 இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
பண ஆசையை வெறுக்கிறவர்களுக்கு தேவனுடைய கட்டளை இது தான்
பண ஆசையை விட்டு ஓடு என்று கட்டளையிடுகிறார் பாருங்கள்
1Ti 6:11 நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
1Ti 6:12 விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.
தேவனுடைய மனுஷன் யார் என்றால் இன்றைக்கு அநேகர் பெரிய பெரிய ஊழியர்களை கையை காண்பிக்கிறார்கள் ஆனால் வேத வசனங்கள் என்ன சொல்லுகிறது என்று பாருங்கள்
யார் பண ஆசையை வெறுக்கிறார்களோ அவர்களை தான் தேவனுடைய மனுஷன் என்று வேத வாக்கியம் அழைக்கிறது
1Ti 6:11 நீயோ, தேவனுடைய மனுஷனே,,,,,
உங்கள் பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வையுங்கள்
Mat 6:19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
Mat 6:20 பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
Mat 6:21 உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்