இயேசுவின் தந்தை, நம் தந்தை!

இயேசுவின் தந்தை, நம் தந்தை!

 செய்தி: சகரியா பூணன்

"என்னைப் போலவே" மாம்சத்தில்ள வந்து சோதிக்கப்பட்டும் பாவம் செய்யாது வாழ்ந்த இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் பெற்றிடும் ஜெய வாழ்க்கையை "குமாரானுடைய சாயலுக்கு ஒப்பான வாழ்க்கை" என ரோமர்8:29-கூறுகிறது. இவர்களே, அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப் பட்டவர்கள் எனவும் 28-ம் வசனம் எடுத்துரைக்கிறது. ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழும்வரை, பிதாவுக்கு ஏக புத்திரனான ஒரே ஒரு குமாரன் மாத்திரமே இருந்தார்! ஆனால் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, மகதலேனா மரியாளைப் பார்த்து " மரியாளே, நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் ஏறிப்போகிறேன்" எனக் கூறினார். தன் சொந்த பிதா, அவர்களுக்கும் பிதா என இயேசு குறிப்பிட்ட முதல் இடம் இதுதான். இயேசு தன் சீஷர்களை முதலாவதாய் "ஊழியக்காரர்கள்" (Servants) என்றே அழைத்தார். பின்பு அவர் "இனி நான் உங்களை ஊழியக்காரன் என்று சொல்லுகிறதில்லை . . . உங்களை சிநேகிதர் (Friends) என்றே அழைப்பேன்" (யோவான் 15:15) எனக் கூறினார். இதற்கு பின்புதான், யோவான் 20௦: 17-ல் அவர்களை "தேவனுடைய குமாரர்" (Sons) என அழைத்தார். இன்று உலகில் தேவனுடைய ஊழியன் என்பதை மேன்மையாக எண்ணுகிறார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் தேவனுடைய குமாரனாய் இருப்பதே அதிக மேன்மையுள்ளதாய் இருக்கிறது! உங்கள் வீட்டில் இருக்கும் வேலைக்காரன் அல்ல, உங்கள் குமாரனையே நீங்கள் மேன்மையாக எண்ணுவீர்கள். தேவனுடைய பார்வையிலும், இவ்வாறு "குமாரனுடைய சாயலுக்கு" மாறும்படி தங்களை ஒப்புக் கொடுத்தவர்களையே தேவனும் அதிகமாய் விரும்புகிறார்.

உங்கள் வீட்டில் நான்கு குமாரர்கள் இருந்தால், அவர்கள் நான்கு பேரையும் ஒரே விதமாய் நேசிப்பீர்கள். உங்கள் மூத்த மகனுக்கு என்ன நன்மை செய்வீர்களோ, அதே நன்மையை உங்கள் இளைய மகனுக்கும் செய்வீர்கள். இங்குதான் நம்மை ஆறுதல்படுத்தும் ஓர் மிகப்பெரிய சத்தியம் அடங்கியிருக்கிறது. "இயேசுவுக்கு" (முதல்பேறான மூத்த மகனுக்கு) பிதா என்ன செய்தாரோ, அதையே எனக்கும் (இளைய குமாரானுக்கும்) செய்திடுவார்! தேவன் தன் பிள்ளைகளிடத்தில் பட்சபாதம் காட்டுவதே இல்லை. இயேசுவை அன்புகூர்ந்தது போலவே என்னையும் அன்புகூருவார்! இயேசுவை பாதுகாத்தது போலவே நம்மையும் பாதுகாப்பார்! சிலுவையின் பாடுகள் அவருக்கு இருந்தாலும், அவரின் ஒரு எலும்புகூட முறிக்கப்பட பிதா அனுமதிக்கவேயில்லை! கால் எலும்பை முறிக்க சேவகன் வருவதற்கு முன்பாகவே, பிதா தன் குமாரனுடைய ஆவியை ஏற்றுக்கொண்டார்! பகைஞர்கள் அவரை சூழ்ந்து குன்றின் பாதாளத்தில் தள்ளி கொலை செய்த முயன்றபோது, அங்கிருந்து அவரை நடத்தி, கூட்டத்தின் நடுவில் மறைந்து போகும்படி செய்தார். சிலுவையில் அறைந்து கொன்றதை, தற்காலிகமான செயலாய் மாற்றி, மூன்றாம் நாளில் தன் குமாரனை உயிரோடு எழுப்பினார்! இப்போது, முதற்பேரான இயேசுவை எப்படி பிதா அன்புகூர்ந்து, நடத்தி, பாதுகாத்தாரோ, அதைப் போலவே அவருடைய இளைய குமாரர்களாகிய நம்மையும் அன்புகூர்ந்து, நடத்தி . . . நித்தியம் மட்டும் பாதுகாத்திடுவார். அவருடைய குமாரனின் சாயலுக்கு ஒப்பாய் மாறுவதற்கு தங்களை ஒப்புக்கொடுத்தும், இந்த சத்தியத்தை விசுவாசிக்காதவர்கள், தேவனையே விசுவாசிக்காதவர்கள்! பிதாவாகிய தேவனை நிந்தனை செய்பவர்கள்! தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்காதவர்கள்!! மனந்திரும்பி, விசுவாசித்து, இந்த ஆண்டு முழுவதும் "தேவனுடைய குமாரர்களாய்" தேவனடைய பாதுகாப்பில் வாழ்ந்திடக் கடவோம்!!

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்