சதிமேஜையை "சாத்தானுக்கே திருப்பி" ஜெயம் தரும் தேவன் !

சதிமேஜையை "சாத்தானுக்கே திருப்பி" ஜெயம் தரும் தேவன் !

சாத்தான்தேவ ஜனங்களைத் தாக்கும்போது, அவனுக்கு எதிராகவே அத்தாக்குதலின் மேஜையை தேவன் எவ்வாறு திசை திருப்புகிறார் என்பதைக் காண அநேகர் தவறுகிறார்கள்.

உதாரணமாய், யோசேப்பின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை தியானித்துப் பாருங்கள்! இந்த "தேவ அற்புதம்" அவன் வாழ்வில் பளிச்சிடுவதை நீங்கள் காண்பீர்கள்!! அவன் 30-வயதாகும்போது, அவனை எகிப்தின் இரண்டாவது அதிபதியாக்கும்படி தேவன் ஓர் திட்டம் வைத்திருந்தார். யோசேப்பு கர்த்தருக்குப் பயந்த மனுஷனாயிருந்ததினிமித்தம், சாத்தானால் அவன் மிகவும் வெறுக்கப்பட்டான்!

எப்படியாகிலும் யோசேப்பை ஒழிக்கும்படி அவனுடைய மூத்த சகோதரர்களை சாத்தான் தூண்டிவிட்டான்! தன் ஆசைக்கு இணங்காத யோசேப்பை பொய்யாய் குற்றம்சாட்டி போத்திபாரின் மனைவி அவனை சிறையில் அடைக்கும்படி செய்தான்!!

யோசேப்பைக் குறித்ததான தேவனுடைய கால அட்டவணைப்படி சிறையிலிருந்த யோசேப்பிற்கு 30 வயதானவுடன், பார்வோனுக்கு ஓர் சொப்பனம் உண்டாகி... "யோசேப்பு சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுகிறவன்" என்பதை ‘பானபாத்திரக்காரன்’ நினைவுகூர்ந்தான். இப்படித்தான் யோசேப்பு பார்வோனுக்கு முன்பாய் வரவழைக்கப்பட்டு, எகிப்தின் இரண்டாவது அதிபதியாக மாறினான்!

அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்கும்படி, சாத்தானின் சதி மேஜையை அவனுக்கு விரோதமாகவே திருப்புவது தேவனின் பெருமகிழ்ச்சியாகும்!

இந்நிகழ்ச்சிகளை, நம் வாழ்வின் சூழ்நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். "பொறாமையினால்" நம்மை வெளியே தள்ள முயற்சிக்கும் தீய சகோதரர்களிடம் நம்முடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்? பொய்யாய் குற்றம் சுமத்திய அந்தப் பொல்லாத பெண்ணிடம் நமது மனோபாவம் எப்படி இருந்திருக்கும்? அநீதியாய் சிறையில் அடைக்கப்பட்டதின் நிமித்தம் நமது மனோபாவம் எப்படி இருந்திருக்கும்? உதவி செய்வேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு அதை மறந்து போகும் நண்பர்களினிமித்தம் நமது மனோபாவம் எப்படி இருந்திருக்கும்? அவர்கள் வேண்டுமென்றோ-தற்செயலாகவோ செய்யும் எல்லா கிரியைகளையும், நம்முடைய வாழ்க்கையில் அவரது தீர்மானம் நிறைவேறும்படி தேவன் உபயோகிக்க முடியும் என்று நாம் விசுவாசிக்க முடிகிறதா? யோசேப்புக்கு அவ்வாறு நிறைவேற்றியிருந்தால், நமக்கும் அவ்வாறே நிறைவேற்றிட அவரால் முடியாதா? நிச்சயம் அவரால் முடியும்! அப்படியே நமக்கும் அவர் செய்திடுவார்!!

யோசேப்பின் வாழ்க்கையைக் குறித்த தேவனுடைய திட்டத்தை யார் குலைத்திருக்க முடியும் என்பதையும் சொல்லுகிறேன். ஒரே மனிதனால் அது கூடும்... அது யோசேப்பே தான்! அவன் தன்னைப் பகைத்த சகோதரர்களிடம் கசப்பு கொண்டிருந்தால், போத்திபார் மனைவியின் சூழ்ச்சி வலைக்கு இணங்கியிருந்தால்... தேவனால் அவன் ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பானே!!

ஆம், உங்கள் வாழ்க்கையில் தேவன் குறித்ததான திட்டத்தை சீர்குலைப்பதற்கு இப்பூவுலகில் ஒருவர் இருக்கக்கூடுமென்றால், அது நீங்கள் ஒருவர்தான்! மற்றபடி, ஒருவரும் சீர்குலைத்திட முடியாது. உங்கள் சிநேகிதரானாலும் முடியாது! உங்கள் சத்துருவானாலும் முடியாது! தூதர்களானாலும் முடியாது! பிசாசுகளானாலும் முடியாது!! ஆம், நீங்கள் மாத்திரமே!! இவ்வுண்மையை நாம் கண்டுகொண்டால், நமக்குத் தீமைசெய்ய விரும்புவோரினிமித்தம் ஏற்படும் எல்லாப் பயங்களுக்கும், தவறான மனோபாவத்திற்கும் நாம் நீங்கி விடுதலையாகியிருப்போம்!!

Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்