சுய - அனுதாபத்திலிசுந்து விடுதலை!! - சகரியா பூணன்

"என்னை யாரேனும் நேசிக்கமாட்டார்களா?" என்று ஏங்கி நிற்கும் ஜனங்களால் இவ்வுலகம் நிறைந்த்திருக்கிறது. அநேக கிறிஸ்தவர்களும், தாங்கள் நேசிக்கப்படும்படியாக சபைவிட்டு சபை செல்லுகிறார்கள்! சிலர் நண்பரிகளிடமும், சிலர் திருமண உறவிலும் அவ்வன்பைத் தேடுகிறார்கள். ஆனால் பரிதாபம்! இவ்விதமாய்த் தேடுவதின் பிரதிபலன் ஏமாற்றத்திலேயே முடிவடைகிறது!! அனாதைகளைப் போல, இவ் ஆதாமின் பிள்ளைகள் பாதுகாப்பற்றவர்களாய் மீண்டும் மீண்டும் "சுய-அனுதாப நோயினால்" பீடிக்கப்படுகிறார்கள். இதில் தேவனை பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கின்றனர்! இவ்வாறு இருக்க வேண்டியது நிச்சயமாய் அவசியமேயில்லை!!
இப்பிரச்சனைகளுக்கு சுவிசேஷம் அளிக்கும் விடை யாது? தேவனுடைய அன்பில் பாதுகாப்பைக் கண்டுகொள்வதுதான் இதற்கு நிரந்தரமான விடை! மறுபடியும், இயேசு தன் சீஷர்களுக்கு, அவர்களுடைய தலையின் மயிரெல்லாம் எண்ணப்படிருக்கிறதென்றும், கோடிக்கணக்கான் பறவைகளைப் போஷிக்கிறவர், கோடிக்கணக்கான மலர்களை உடுத்துவிக்கிறவர் நிச்சயமாய் உங்களையும் பராமரித்துக் காப்பார் என்றும் உறுதிபட கூறினார். இவையெல்லாவற்றிற்கும் மேலாக, "தம்முடைய சொந்த குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" என்று ரொமர் 8:32-ம் வசனம் அறைகூவி முழங்குகிறது.
இதைத்தான், "இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தல்" என புதிய ஏற்பாடு விளம்புகிறது. "(நம்மீது தேவன் கொண்ட பூரண அன்பை) விசுவாசித்தவர்களாகி நாமோ, அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்" (எபிரெயர் 4:3) என்றே வாசிக்கிறோம். மேலும், இந்த இளைப்பாறுதலுக்குள், நம் முழு இருதயத்தோடும் நாம் பலவந்தம் செய்து பிரவேசிக்க வேண்டும் எனவும் வேதம் வலியுறுத்திக் கூறுகிறது (எபிரெயர் 4:11). இந்த இளைப்பாறுதலைக் கண்டடையாதவர்களே மிக எளிதில் அலைக்கழிக்கப்பட்டு வீழ்ச்சியடைவார்கள்!
Content from Christian Fellowship Church , Bangalore. (INDIA)

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்