செய்தி: முழு அர்ப்பணத்தில் தேவனின் பூரண பாதுகாப்பு

முழு அர்ப்பணத்தில் தேவனின் பூரண பாதுகாப்பு! - சகரியா பூணன்

"யோவான் ௧௭:௨௩-ல் இயேசு இவ்வுலகத்திற்க்காகவோ அல்லது மனுஷீகக் கிறிஸ்துவர்களுக்காவோ ஜெபிக்கவில்லை. மாறாக, "எல்லாவற்றையும்" வெறுத்துவிட்டு அவரைப் பின்பற்றிய ௧௧- சீஷ்ர்களுக்காகவே ஜெபித்தார்! இவர்களே, இம்மண்ணுலக மக்களும்- மாம்ஷீகக் கிறிஸ்தவர்களும் கண்டுகொள்ள முடியாத "பிதாவின் அன்பின் பாதுகாப்பைத்" தங்கள் வாழ்வில் மெய்யாய் கண்டவர்கள்!

இன்று ஏன் அநேக கிறிஸ்தவர்கள் "மாம்ஶீகக் கிறிஸ்தவர்களாய்" இருக்கின்றனர்? ஏனெனில் பிசாசானவன், இவர்கள் தங்களைத் தேவனுக்குப் பூரணமாய் ஒப்புக்கொடாமல் "இம்மண்ணுக்குரியதையும்,விண்ணுக்குரியதையும் சேர்த்துப் பெற்றுக்கொண்டு" அதிக சந்தோஷமாய் இருக்கலாம் என அவர்களை சிந்திக்க வைத்து ஏமாற்றியிருப்பதால்தான்! ஆனால், இது ஓர் கொடிய வஞ்சகம்!! நாம் தேவனுடைய பரிபூரண அன்பை விசுவாசித்திருப்போமென்றால் "கொஞ்சம்கூட" நமக்கென்று ஏதும் "பதுக்கிக்கொள்ளாமல்" எல்லாவற்றையும் மனப்பூர்வமாய் அவருக்கு ஒப்புக் கொடுத்திருப்போம்! அப்படிச் செய்திருந்தால் பிலிப்பியர் 4:6,7-ல் வேதம் சொல்கிறது போல "எல்லா" பதட்டமான கவலைகளிலிருந்தும் நாம் "பரி பூரணமாய்" விடுதலையாகியிருப்போம்! ஆனால், மாம்ஷீகக் கிறிஸ்தவர்களோ, "எங்கே இந்தப் படகு நடுவில் புயலினிமித்தம் கவிழ்ந்துவிடுமோ" என்று எப்போதும் சந்தேகித்து சஞ்சலத்துடன் இருப்பார்கள்!பிதாவின் பூரண அன்பில் பாதுகாப்பாயிருந்த இயேசுவால், புயலினூடேயும் ‘ஆழ்ந்த நித்திரையாய் இளைப்பாற முடிந்தது. ஏனெனில் "இவ்விதமாகப்" பிசாசு தன்னை மூழ்கடிக்க ஒருக்காலும் முடியாது என இயேசு நன்றாய் அறிந்திருந்தார். ஏனெனில், அந்தப் பிதா இயேசுவை எப்போதும் கண்ணுறங்காமல் காவல் புரிகிறாரே! இவ்விதமாக, இயேசுவை நேசித்துக் காத்துக்கொண்டது போல பிதா நம்மையும் நேசித்துக் காக்கிறார் என்பதை நாம் அறிந்து கொண்டோமென்றால் இவ்வாழ்க்கையின் மகத்துவம்தான் என்னே!!

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்