கிறிஸ்தவ குடும்பம்: புருஷன் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும்

பகுதி:3 கிறிஸ்தவ குடும்பம் - புருஷன் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும்

1) புருஷன்(கணவன்) தன் மனைவியை மாத்திரமே உடையவானாக இருக்க வேண்டும்.
1Co 7:2 ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும்..... உடையவர்களாயிருக்கவேண்டும்.
வேறொரு ஸ்திரீயை அவன் உடையவான இருப்பான் அவன் வேசித்தனம் செய்கிறான்

2) ஒரு புருஷன்(கணவன்) தன் மனைவியல்லாத ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கும் போது என்னவாகிறது?
Mat 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.

3) புருஷன்(கணவன்) தன் மனைவியிடம் அன்பு செலுத்தினால் மாத்திரம் போதுமா? 
இல்லை புருஷன் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும்
1Co 7:3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; ,,,,,

புருஷன் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாத போது அவள் வேசித்தனம் செய்வதற்கு காரணமாகிறான்

4) புருஷனுடைய சரீரத்திற்கு அதிகாரி யார்?
மனைவி தான் புருஷனுடய சரீரத்திற்கு அதிகாரி
1Co 7:4 ,,,, அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.

5) மனைவியினுடைய சரீரத்திற்கு அதிகாரி யார்?
புருஷன் தான் மனைவியினுடைய சரீரத்திற்கு அதிகாரி
1Co 7:4 மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.

6) ஆகையால் கணவனும் மனைவியும் எந்த சூழ்நிலையிலும் பிரியக் கூடாது
1Co 7:5 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.

உபவாசத்திற்காகவும் ஜெபத்திற்காகவும் சிலகாலம் பிரிந்து இருக்க வேண்டும் என்று இருவரும் சம்மதித்தாலன்றி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க வேண்டும்

7) இன்றைக்கு அநேக கிறிஸ்தவ புருஷர்கள் தங்களுடைய மனைவிகளை விட்டு பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள்
அப்படி அவர்கள் வேலை செய்யும் போது என்னவாகிறது?
கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பதினால் சோதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது
1Co 7:5 ,,, உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.

விரத்துவம்(சுயகட்டுபாடு) இல்லாமையால் சாத்தான் உங்களை தூண்டிவிட்டு கணவனையோ அல்லது மனைவியையோ பாவம் செய்ய வைப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது

கணவன் எங்கே இருக்கிறாரே அங்கே மனைவியும் இருக்க வேண்டும் அப்படி இல்லாதபட்சத்தில் அது நம்மை பாவத்திற்கு நேராக வழிநடத்துவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது

8) அநேகர் புருஷர்கள் தாங்கள் மனைவியானவளை விட நாம் மேலானவர்கள் என்று நினைத்து கொள்ளுகிறார்கள்
1Co 11:7 புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.
1Co 11:8 புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்.
1Co 11:9 புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.

9) மேலே சொன்னது தேவனுடைய சத்தியம் தான் ஆனால் அதற்கு பின்வரும் வசனங்களில் தேவன் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்
1Co 11:11 ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை.
1Co 11:12 ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.

10) ஏவாள் மாத்திரமே ஆதாமிடமிருந்து தோன்றியவள் ஆனால் அதற்கு பிறகு ஒவ்வொரு புருஷனும் ஸ்திரீயினால் தான் தோன்றுகிறான்
1Co 11:11 ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை.

புருஷனுக்கு எப்படி சரீரம் மனம் இருதயம் ஆத்துமா இருக்கிறதோ ஸ்தீரியானவளுக்கும் அப்படியே இருக்கிறது

11) ஒரு புருஷன் எப்படி இரட்சிக்கப்படுகிறானோ அதைப் போல் தான் மனைவியானவளும் இரட்சிக்கப்படுகிறாள் 
Gal 3:27 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
Gal 3:28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

இயேசு கிறிஸ்து சபையிலே அன்பு கூர்ந்தது போல உங்கள் மனைவியினிடத்தில் அன்பு செலுத்துங்கள். இயேசு கிறிஸ்து சபையை போஷித்து காப்பற்றுவது போல உங்களை மனைவியை போஷித்து காப்பற்றுங்கள்

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கிறிஸ்தவ குடும்ப சத்தியங்களை படிப்போம்

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்