மெய்யான மனந்திரும்புதல் வேண்டும்!
மெய்யான மனந்திரும்புதல் வேண்டும்!
சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றை சிருஷ்டிகருக்கு மேலாக உயர்த்துவதே விக்கிரக ஆராதனையாகும். அது, பணமோ அல்லது அழகான ஸ்திரீயோ அல்லது நம்முடைய பேர் புகழோ ஆகிய எதுவாகவும் இருக்கலாம். இவ்வாறு சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றை சிருஷ்டிகருக்கு பதிலாய் தொழுதுகொள்ளுவதால் அதுவே விக்கிரக ஆராதனையாக மாறுகிறது. இதுவே எல்லா பாவங்களுக்கும் வேர் என்றும் கூறலாம்!
உண்மையான மனந்திரும்புதல், சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றையும் விட்டு விட்டு தேவனிடத்தில் திரும்பி, "சர்வ வல்லமையுள்ள தேவனே! நீர் ஒருவரே தொழுகைக்கும் ஆராதனைக்கும் பாத்திரர். இந்நாள்வரை, சிருஷ்டிக்கப்பட்டவைகளை நான் தொழுது கொண்டதற்காக மிகவும் வருத்தம் அடைகிறேன். இன்றிலிருந்து என் வாழ்வில் நீர் மாத்திரமே எனக்கு எல்லாவற்றிலும் மேலானவர்" என நாம் கூறுவதாய் இருக்க வேண்டும்!
மனந்திரும்ப வேண்டும் என்பதற்காக, நம்முடைய வேலைகளை அல்லது குடும்பத்தை விட்டு விட்டு ஏதாகிலும் காடு அல்லது மலைக்குச் சென்று சந்நியாசியாக மாறவேண்டும் என்பது பொருளாகாது. அப்படி இல்லவே இல்லை! நாம் யாவரும் நம்முடைய பிழைப்பிற்காக சம்பாதிக்கவும், குடும்பங்களை உடையவர்களாய் இருக்கவுமே தேவன் விரும்புகிறார்! பணம் சம்பாதிப்பது ஒரு பாவமல்ல. ஆனால் தேவனைக் காட்டிலும் பணத்தை அதிகமாய் நேசிப்பதே பாவமாகும்!
நாம் மனந்திரும்பி விட்டுவிட வேண்டிய மற்றொரு பாவம் யாதெனில், பிறரை மன்னிக்க முடியாத சுபாவமே ஆகும். தேவன் உங்களுடைய எல்லா பாவங்களையும் மன்னிப்பதற்கு நீங்கள் விரும்பினால், உங்களுக்கு ஏதாகிலும் ஒரு வகையில் தீங்கு செய்த யாராயிருந்தாலும் அவர்களை நீங்களும் மன்னிப்பதற்கு விருப்பம் உடையவர்களாய் இருக்க வேண்டும். தேவன் உங்களுக்கு எவைகளைச் செய்தாரோ அவைகளை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் தேவனும் உங்களை மன்னித்திட மாட்டார்!
ஆண்டவராகிய இயேசு கூறுகையில், "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்" (மத்தேயு 6:15) என உறுதியாகக் கூறினார்.
உங்களுக்கு சொல்லொண்ணா தீமை செய்த ஒருவரை மன்னிப்பதற்கு அதிக கஷ்டமாயிருப்பதாக நீங்கள் உணரலாம். இத்தருணத்தில் நீங்கள் தேவனிடத்தில் ஜெபம் பண்ணி, அந்நபரை மன்னிப்பதற்காக உதவி செய்யும்படி அவரிடம் நீங்கள் கேளுங்கள். இவ்வாறு உதவி செய்வதற்கு சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமை உங்களுக்கு எப்போதும் ஆயத்தமாயிருக்கிறது!!

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்